சினேகங்கினி சுரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினேகங்கினி சுரியா
உறுப்பினர் ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
2014–2019
முன்னையவர்நிகார் இரஞ்சன் மகானந்தா
தொகுதிஅத்தாபிரா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்

சினேகங்கினி சுரியா (Snehangini Chhuria) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் ஒடிசா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1][2][3] இவர் பிஜு ஜனதா தளம் கட்சியினைச் சார்ந்தவர். இவர் இந்தக் கட்சியின் சார்பில் ஒடிசா சட்டமன்றத்திற்கு 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அத்தாபிரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஒடிசா சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குடும்பம்[தொகு]

சினேகங்கினி சுரியா 9, திசம்பர், 1968-இல் பிறந்தார்.[4] இவரது தந்தை மார்சு பிரசாத் மொகாபத்ரா. கலைத்துறையில் பட்டம் பெற்ற பிறகு சட்டம் பயின்ற இவர், சமூக சேவகராகச் சேவையாற்றினார்.[4] இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.[5]

அரசியல்[தொகு]

சினேகங்கினி சுரியா சமூக சேவகியாக பணிபுரிந்து, ஆரம்பத்தில் ஊராட்சி மன்ற அளவில் அரசியலில் தீவிரமாக இருந்தார்.[4] 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த சுரியா,[6][6] 2014 ஒடிசா பொதுத் தேர்தலில், சினேகங்கினி மீண்டும் பிஜு ஜனதா கட்சியின் சார்பில் அத்தாபிரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று 15வது ஒடிசா சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8][9]

15வது ஒடிசா சட்டப் பேரவைக்கு சினேகங்கினி sஉரியா தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​நவீன் பட்நாயக்கின் 4வது அமைச்சரவையில் மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும், 2கைவினை, ஜவுளி மற்றும் கைவினைத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.[4][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Odisha's Attabira MLA Snehangini Chhuria Appointed As President Of BJD's Women Wing". Update Odisha. 31 December 2020. பார்க்கப்பட்ட நாள் 12 October 2021.
  2. Subrat Mohanty (3 April 2019). "Repeat of triangular fight in Attabira assembly segment in Odisha". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 12 October 2021.
  3. "From Teacher to Minister: Journey of Snehangini". The New Indian Express. 26 May 2014. பார்க்கப்பட்ட நாள் 12 October 2021.
  4. 4.0 4.1 4.2 4.3 "Smt. Snehangini Chhuria". odishaassembly.nic.in. Odisha Assembly. பார்க்கப்பட்ட நாள் 20 February 2019.
  5. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2009/stat_OR_April2009.pdf
  6. 6.0 6.1 "List of Candidates in ATTABIRA:BARGARH". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2019-02-20.
  7. "Constituency Wise odisha Assembly Election result 2014". Leadtech.in. Archived from the original on 2014-08-18. பார்க்கப்பட்ட நாள் 2014-06-15.
  8. "Odisha - Attabira". Election Commission of India. Archived from the original on 18 May 2014. பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
  9. "Orissa Assembly Election 2014 Constituency: Attabira (4)". EmpoweringIndia.org. பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
  10. Dharitri. "ଦେବଗଡରେ ମନ୍ତ୍ରୀ ସ୍ନେହାଙ୍ଗିନୀ ଛୁରିଆ ଜାତୀୟ ପତାକା ଉତ୍ତେଳନ କଲେ". Dharitri.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினேகங்கினி_சுரியா&oldid=3920421" இலிருந்து மீள்விக்கப்பட்டது