சிந்து ராஜசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிந்து ராஜசேகரன், இந்தியாவின் தமிழகத்தைச் சார்ந்த எழுத்தாளரும் திரைப்பட தயாரிப்பாளருமாவார். அவரது முதல் ஆங்கில புதினமான பலவண்ணக்காட்சிகளின் பிரதிபலிப்பு(Kaleidoscopic reflections) என்ற புத்தகம் 2011ம் ஆண்டில் கிராஸ் வேர்ட் புத்தக விருதுக்காக பட்டியலிடப்பட்ட சிறப்பைக்கொண்டது,[1] அவரது கட்டுரைகள், கவிதைகள் மற்றும் புனைகதைகள் பல்வேறு சர்வதேச வெளியீட்டாளர்களால்  தொகுப்புககளாக வெளிவந்துள்ளது. இவர், எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கேம்பர் சினிமா என்ற  சுயாதீன திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை, ரீவத்சன் நடதூர், சுஷாந்த் தேசாய் மற்றும் சரண்யன் நடதூர் ஆகிய இளம் தொழில்முனைவோரோடு இணைந்து நிறுவியுள்ளார், இந்த நிறுவனத்தின் தயாரிப்பில், கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை மற்றும் காலங்களை அடிப்படையாகக் கொண்டு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்தோ-பிரித்தானிய திரைப்படமான ராமானுஜன் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவரது இரண்டாவது புத்தகம் அதனால் நானகவே இருக்கட்டும் (So I Let It Be) என்ற சிறுகதைகளின் தொகுப்பாகும்; இது 2019 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[2]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

சென்னையைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான, ஞான ராஜசேகரன் மற்றும் சகுந்தலா ராஜசேகரன் ஆகியோரின் மகளாகப் பிறந்தவர் சிந்து. இவரது தந்தை மகாகவி பாரதி, பெரியார் போன்ற தலைவர்களின் வாழ்க்கையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திரைப்படமாக எடுத்த திரைப்பட இயக்குனரும் ஆவார். தந்தையின் வேலை காரணமாக கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் வளர்ந்த இவர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியாளராக அண்ணா பல்கலைக்கழகம், சென்னையில் பயிற்சி பெற்றதோடு அல்லாமல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில், படைப்பு எழுத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

இலக்கியப் படைப்புகள்[தொகு]

சிந்துவின் முதல் நாவலான ''பலவண்ணக்காட்சிகளின் பிரதிபலிப்பு'' [3] , ஐந்து தலைமுறைகளைக் கடந்த ஒரு தமிழ்க் குடும்பத்தின் கதை, அவர்களின் தலைவிதி, முரண்பாடுகளின் பூமியான இந்தியாவுடன் எவ்வாறு பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றியது.

அவரது இரண்டாவது புத்தகமான, அதனால் நானகவே இருக்கட்டும் (So I Let It Be), என்ற சிறுகதைத்தொகுப்பில், காதல், தனித்தன்மை இழப்பு, பாலுணர்வு மற்றும் ஏக்கம் பற்றிய மிகக் கடுமையான மற்றும் ஆழமான உணர்வுகளை கருப்பொருட்களாகக் கொண்டு எழுதியுள்ளார். இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்துமே பல்வேறு இலக்கிய இதழ்களில் வெளிவந்தவையே. ''புனிதப்பசு' என்ற கதையின் மதிப்பாய்வு, சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ஆசிய இலக்கிய மதிப்பாய்வில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.[4] ''வழக்கம்" என்ற சிறுகதை எல்ஸ்வேர் லிட்டில் இதழிலும்.[5] மற்றொரு சிறுகதையான ''கடவுளின் மலை'' கிதாப் இதழிலும் வெளிவந்துள்ளது..[6] ஹஃபிங்டன் போஸ்ட் [7] உங்கள் மனதைத் தூண்டும் பதினான்கு சமகால சிறுகதைகள் என்ற பட்டியலில் 'வழக்கம்" கதையை பட்டியலிட்டுள்ளது.

சிந்துவின் பாராட்டப்பட்ட மூன்றாவது புத்தகம், ஆணாதிக்கத்தை அடித்து நொறுக்குதல்,[8] என்ற புத்தகம், அலெஃப் புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மில்லினியல்கள் மற்றும் இசட்(Z) தலைமுறைகளின் தைரியமான குரல்களை மையமாகக் கொண்டு, சொல்லப்பட்ட இந்த நாவலில், பல்வேறு பின்னணியைச் சேர்ந்த இளம் இந்தியப் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் ஆணாதிக்கத்தை எவ்வாறு சமயோசிதமாக வெல்கிறார்கள் என்பதை ஆராய்ந்து எழுதியுள்ளார்.

அவரது கவிதைகளான மேக்தூத் மற்றும் லெட் மீ மோலஸ்ட் யூ ஆகியவை கவிதைத் தொகுப்பின் ஒரு பகுதியாக மியூஸ் இந்தியாவால் வெளியிடப்பட்டுள்ளன,[9] 2013 ம் ஆண்டில் சோ ஐ லெட் இட் பி மற்றும் மெர்மெய்ட் [10] போன்றவை கனடாவின் ஹிடன் புரூக் பிரஸ் மூலம் தி டான்ஸ் ஆஃப் தி பீகாக் என்ற இந்திய கவிதைகளைப் பற்றிய புத்தகத்தில்  வெளியிடப்பட்டன.[11]

பெல்லா கலிடோனியா [12] என்ற ஸ்காட்டிஷ் இதழில் இந்தியாவின் அரசியல் மற்றும் கலாச்சார தாக்கம் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் 2013 ம் ஆண்டில் நடைபெற்ற ஹைதராபாத் இலக்கிய விழாவில் பங்கேற்று பேச அழைக்கப்பட்ட இளம் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

திரைப்பட படைப்புகள்[தொகு]

தலைப்பாகை மகளிர், என்ற தலைப்பில் சிந்து இணைந்து எழுதி நடித்துள்ள ஒரு நாடகம், 2011ம் ஆண்டு நடைபெற்ற எடின்பர்க் பிரிஞ்சு விழாவில் நடிக்கப்பட்டது.[13]

ஐக்கிய ராட்சியத்தில் உள்ள இல்லிகட் இங்க் [14] மற்றும் ரைட்டர்ஸ் பிளாக் என்ற   முதன்மை செயல்திறன் குழுக்களில் சில தலைப்புகளில் உரையாடியும் உள்ளார்.

தனது தந்தையைப் பின்பற்றி சிந்துவும், ராமானுஜன் திரைப்படத்தின் மூலம் திரைக்கதை மற்றும் திரைப்படத் தயாரிப்பு உலகில் நுழைந்துள்ளார்; அவர் படத்தின் உதவி திரைக்கதை எழுத்தாளர் [15] மட்டுமல்லாது அந்த படத்தின் இணை தயாரிப்பாளரும் ஆவார்.[16] தனது கணவர் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து கற்பூர சினிமா என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவியுள்ளார்.

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட, ராமானுஜன் திரைப்படம், 2015 ஆம் ஆண்டில் நோர்வேயின் என்.டி. எஃப். எஃப் விழாவில் சிறந்த தயாரிப்புக்கான விருது, ஆனந்த விகடன் சிறந்த தயாரிப்பு விருது மற்றும் வி 4 என்டர்டெய்னர்ஸ் திரைப்பட விருது என்பவைகளை வென்றுள்ளது. இந்திய குடியரசுத் தலைவரின் அலுவலகம், இந்த தயாரிப்பு நிறுவனத்தின் ராமானுஜன் திரைப்படத்தை குடியரசுத் தலைவருக்காக சிறப்பாக திரையிட அவரது மாளிகைக்கு அழைத்து, திரையிடப்பட்டு பாராட்டியது.[17]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Crossword Book Award Longlist announced". IBNLive.com. 6 May 2011. Archived from the original on 3 May 2014. பார்க்கப்பட்ட நாள் 3 May 2014.
  2. "So I Let It Be by Sindhu Rajasekaran". Pegasuspublishers.com. 28 February 2019.
  3. "'Crossword Book Award Longlist announced'". May 5, 2011.
  4. "'Asia Literary Review'".
  5. "'Elsewhere Lit- A journey of literature and art'".[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "'Short Story: Mountain of God'".
  7. "'14 Contemporary Short Stories That Will Spark Your Mind'".
  8. "Smashing the Patriarchy". Aleph Book Company. பார்க்கப்பட்ட நாள் 24 March 2021.
  9. "Sindhu Rajasekaran". museindia.com. Archived from the original on 3 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 3 May 2014.
  10. "Two in the Bush". 10 March 2011. Archived from the original on 3 May 2014. பார்க்கப்பட்ட நாள் 3 May 2014.
  11. Dance of the Peacock. 
  12. "'What Scottish independence means for Asia, for India'".
  13. "Literary Events in Edinburgh". cityofliterature.com. Archived from the original on 3 May 2014. பார்க்கப்பட்ட நாள் 3 May 2014.
  14. "'FEATURE – Illicit Ink'".
  15. "Ramanujan shoots of the film at Cambridge and London". indianoon.com. Archived from the original on 3 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 3 May 2014.
  16. "Camphor Cinema Presents Their First Film Ramanujan". boxofficeindia.co.in. Archived from the original on 20 August 2013. பார்க்கப்பட்ட நாள் 3 May 2014.
  17. "'Prez Pranab Wowed by Ramanujan's Story'". March 30, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்து_ராஜசேகரன்&oldid=3935076" இலிருந்து மீள்விக்கப்பட்டது