சித்தி முஸ்தா முலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2007 இல் சித்தி முஸ்தா முலியா

சித்தி முஸ்தா முலியா (Siti Musdah Mulia) (பிறப்பு 1958) இந்தோனேசியப் பெண்கள் உரிமை ஆர்வலரும் மற்றும் மதப் பேராசிரியரும் ஆவார்.[1] இந்தோனேசிய அறிவியல் நிறுவனத்தில் ஆராய்ச்சி பேராசிரியராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார். தற்போது சியாரிஃப் இதயதுல்லா மாநில இசுலாமிய பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆய்வுகள் பள்ளியில் இசுலாமிய அரசியல் சிந்தனைத் துறை விரிவுரையாளராக உள்ளார்.[2][1][3] 2007 முதல், இந்தோனேசியாவில் மதங்களுக்கிடையேயான உரையாடலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட மதம் மற்றும் அமைதி குறித்த இந்தோனேசிய மாநாட்டின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவராக சித்தி பணியாற்றியுள்ளார்.[4][5] முன்னாள் இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் மேகவதி சுகர்ணோபுத்திரியால் நிறுவப்பட்ட சிந்தனைக் குழுவான மேகாவதி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.[6]

ஆரம்பகால வாழ்க்கை.[தொகு]

தெற்கு சுலாவெசியின் போன் என்னுமிடத்தில் 1958 ஆம் ஆண்டில் ஒரு பழமைவாத முஸ்லிம் குடும்பத்தில் சித்தி முஸ்தா பிறந்தார்.[6] இவரது தந்தை ஒரு உள்ளூர் இசுலாமியத் தலைவராக இருந்தார். அவர் தாருல் இசுலாத்தில் ஒரு படைப்பிரிவுத் தலைவராக பணியாற்றினார். அதே நேரத்தில் இவரது தாயார் தனது கிராமத்திலிருந்து வந்து இசுலாமிய பள்ளியில் பட்டம் பெற்ற முதல் பெண் ஆவார்.[7]

தொழில் வாழ்க்கை[தொகு]

1997 ஆம் ஆண்டில், சியாரிஃப் இதயதுல்லா இசுலாமிய அரசு பல்கலைக்கழகத்தில் இசுலாமிய சிந்தனையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை சித்தி முஸ்தா முலியா பெற்றார்.[8][1] 1999 முதல் 2007 வரை இவர் மத விவகார அமைச்சகத்தின் மூத்த ஆலோசகராக பணியாற்றினார். அங்கு இந்தோனேசியாவின் முன்மொழியப்பட்ட இசுலாமிய சட்டக் குறியீட்டை சவால் செய்யும் 2004 சட்ட வரைவு, சிறுவர் திருமணம் மற்றும் பலமனைவி மணம் போன்றவை தடை செய்ய சட்டத்திருத்தம் வேண்டும் என்றும், வன்முறை போராட்டங்கள் காரணமாக மதங்களுக்கு இடையிலான நிகழும் திருமணத்தை அனுமதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். இறுதியில் மறுவடிவமைப்பு கைவிடப்பட்டது. 2000 முதல் 2005 வரை, இந்தோனேசிய உலமா அமைப்பின் ஆராய்ச்சி பிரிவின் தலைவராக இருந்தார்.

சித்தி முஸ்தா, இஸ்லாம் கிரிட்டிசைஸ் பாலிகாமி (2003), த ரெஃஃபார்மிஸ்ட் முஸ்லிமா என்சைக்ளோபீடியாஃ எசென்ஸ் ஆஃப் ஐடியாஸ் ஃபார் ரீஇன்டர்பிரெட்டேஷன் அண்ட் ஆக்சன் (2004) மற்றும் இஸ்லாம் அண்ட் தி இன்ஸ்பிரேஷன் ஆஃப் ஜெண்டர் ஈக்வாலிட்டி (2005) உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.[4] 2020 ஆம் ஆண்டில், இவர் ரெஃஃபார்மிஸ்ட் முஸ்லீமா என்ற புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டார்.[9]

இசுலாமிய பிரச்சினைகள் குறித்து மிதமான கருத்துக்களை வெளிப்படுத்திய சித்தி முஸ்தா, பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை என்றும், எல்ஜிபிடி நட்பு உணர்வுகளை வெளிப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.[6] பலதார மணம் ஹராம் என்றும் முஸ்தா கருதினார் .[10] முஸ்லிம் பெண்கள் இசுலாமிய போதனைகளைத் தாங்களே விளக்கி உலமாக்களாக மாற அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.[11]

பாராட்டுகள்[தொகு]

சித்தி முஸ்தா 2007 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து சர்வதேச வீரதீரப் பெண்கள் விருதைப் பெற்றார். 2008 ஆம் ஆண்டில், இசுலாத்தில் உரையாடல் மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கான இவரது பணிக்காக யாப் தியாம் இயன் மனித உரிமைகள் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.[3][1][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Department Of State. The Office of Electronic Information, Bureau of Public Affairs (2007-03-07). "Honorees". 2001-2009.state.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-09.
  2. SPEAKERS / Prof. Dr. Siti Musdah Mulia | Council for a Parliament of the World's Religions பரணிடப்பட்டது 2014-04-19 at the வந்தவழி இயந்திரம்
  3. 3.0 3.1 Siti Musdah Mulia | WISE Muslim Women பரணிடப்பட்டது 2014-08-12 at the வந்தவழி இயந்திரம்
  4. 4.0 4.1 SPEAKERS / Prof. Dr. Siti Musdah Mulia | Council for a Parliament of the World's Religions பரணிடப்பட்டது 2014-04-19 at the வந்தவழி இயந்திரம்
  5. "Musdah Mulia: Injecting spirituality into human rights activism". The Jakarta Post (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
  6. 6.0 6.1 6.2 "In the Land Where Everyone's God: Interview with Musdah Mulia". magdalene.co (in ஆங்கிலம்). 8 August 2014. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
  7. "VOI.CO.ID". voi.co.id. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
  8. 8.0 8.1 "Siti Musdah Mulia: A courageous woman". The Jakarta Post (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-09.
  9. "Musdah Mulia: Injecting spirituality into human rights activism". The Jakarta Post (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
  10. Yusefri, Y (December 2017). "The Law of Polygamy in Islam: a Methodological Review of Siti Musdah Mulia's Legal Thought". AJIS Academic Journal of Islamic Studies 2 (2): 121. doi:10.29240/ajis.v2i2.312. 
  11. Department Of State. The Office of Electronic Information, Bureau of Public Affairs (2007-06-05). "Dr. Siti Musdah Mulia -- Indonesia [Essay]". 2001-2009.state.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தி_முஸ்தா_முலியா&oldid=3914406" இலிருந்து மீள்விக்கப்பட்டது