சித்திரக்கதை இதழ்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை, சிங்கள சித்திரக்கதை இதழ்களின் முகப்பட்டைகள்

சித்திரக்கதை இதழ்கள் என்பன கதைகளை எழுத்து வடிவாக மட்டுமே அல்லாமல், பேசும் சித்திரங்களாக, கதாப்பாத்திரங்களை ஓவிய வடிவில் வெளியிடப்படும் இதழ்களாகும். இவை அநேகமாக வார இதழ்களாகவே வெளிவரும். 12 முதல் 16 வரையான பக்களைக் கொண்ட இவ்விதழ்களில் ஒரு கதைக்கு ஒரு பக்கம் மட்டுமே கொடுக்கபடும். கதைகள் தொடர்கதைகளாக இருக்கும். சில கதைகள் பல ஆண்டுகளாக தொடர்கதைகளாக வெளிவந்து கொண்டிருப்பவையும் உள்ளன. ஒவ்வொரு வாரமும் சித்திரக்கதை வாசகரகளை அடுத்து, அடுத்து என்ன நடக்கும், என வாசகர்களை தூண்டும் வண்ணம் கதையமைப்புகள் இருக்கும்.

இவற்றின் கதைகள் உரையாடல் வடிவில் இடம்பெறுவதோடு, சித்திரங்களால் கதாபாத்திரங்களை, இடங்களை பார்க்கக்கூடியவாறு வரையப்பட்டிருக்கும். சிறிய சிறிய சதுரவடிவில் கதாபாத்திரங்கள் வரையப்பட்டு, அதில் உள்ள கதாபாத்திரங்கள் உரையாடுவதையும், சிந்திப்பதையும் கூட வேறுபடுத்தி காட்டுதல் இந்த இதழ்களின் சிறப்பம்சம் ஆகும். குறிப்பாக இந்த சித்திரக்கதை இதழ்கள், கதைகளையும் விட, சித்திரங்களுக்கு முன்னுரிமை கொடுத்தது வெளியிடப்படுபவைகளாகும். இருப்பினும் சிறந்த கதையும் அழகிய சித்திரங்களையும் கொண்ட கதைகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெருகின்றன.

இலங்கையில் சித்திரக்கதை இதழ்கள்[தொகு]

இலங்கையில் சித்திரக்கதை இதழ்கள் சிங்கள மொழியில் எண்ணற்றவை தொடருந்தும் வெளிவருகின்றன. இந்த இதழ்களின் வெளிவரும் கதைகள், கதாபாத்திரங்கள் பலரை இவ்வாறான இதழ்களின் மீது மிகுந்த விருப்பை கொண்டிருப்பதுடன், இலங்கை சித்திரக்கதை வாசகர்கள், திரைப்பட கதாநாயகனுக்கு பரம ரசிகன் ஆவது போன்றே, இந்த சித்திரக்கதைகளில் வரும் கதாநாயகனுக்கும் ரசிகர்கள் ஆகிவிடும் அளவிற்கு இலங்கையில் சிங்கள சித்திரக்கதை இதழ்கள் சிங்களவரிடையே மிகுந்த வரவேற்பையும் சிறப்பையும் பெற்றவைகளாகும்.

சில கதைகள் இலங்கையில் நடைபெற்ற இனப்போராட்டத்தை சித்தரித்தும், தமிழர் சிங்கள வரலாற்று போர்களை சித்தரித்தும் கூட கதைகள் வெளிவந்தன.

தமிழ் சித்திரக்கதை இதழ்கள்[தொகு]

இலங்கையில் சித்திரக்கதை இதழ்கள் எனும் போது, 1970களின் பிற்பகுதியில் முதல் 1980களின் முற்பகுதி வரை வெளியான சித்திரா சித்திரக்கதை இதழைத் தவிர வேறு இதழ்கள் வெளிவந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. 1980களின் பின்னர் தமிழில் சித்திரக்கதை இதழ்கள் வெளிவரவில்லை.

ஏனைய நாடுகளில்[தொகு]

சப்பான், சீனா, ஹொங்கொங் போன்ற நாடுகளின் நூற்றக்கணகான சித்திரக்கதை இதழ்கள் ஒவ்வொரு வாரமும் வெளிவருகின்றன. இந்த சித்திரக்கதை இதழ்களுக்கு என்றே ஒரு பெரும் வாசகர் வட்டங்கள் உள்ளனர்.

ரசிகர்கள்[தொகு]

இந்த இதழ்களில் சித்திரங்களை வரையும் ஓவியர்கள், திரைப்படத்தின் கதாநாயகன் அளவிற்கு வாசகர்கள் இடையே மிகவும் பிரசித்திப் பெற்றவர்களாகிவிடுகின்றனர். இந்த ஓவியர்களுக்கு என்றே ஒரு ரசிகர் வட்டங்களும் உள்ளன. சில நேரங்களில் ஒரு இதழில் சித்திரங்களை வரைந்து வரும் ஓவியர், அந்த இதழில் நிறுவனத்தில் இருந்து விலகி வேறு நிறுவனத்தில் உள்ள ஒரு இதழில் வரையத் தொடங்கிவிட்டார் என்றால், ரசிகர்களும் அந்த இதழை வாங்க ஆரம்பித்து விடுவர். சில நேரங்களின் ஓவயரே சொந்தமான சித்திரக்கதை இதழ்களை வெளியிடுவோரும் உள்ளனர்.

ஒரு சித்திரக்கதை இதழில் இருந்து, ஒரு புகழ்பெற்ற ஓவியர் விலகிவிடுவதால், செல்வாக்கு இழந்து, வணிக ரீதியில் தோழ்வியடைந்து மறைந்து விடும் இதழ்களும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரக்கதை_இதழ்கள்&oldid=3723364" இலிருந்து மீள்விக்கப்பட்டது