சிங்கார் பள்ளிவாசல்

ஆள்கூறுகள்: 22°40′22″N 89°44′33″E / 22.6728°N 89.7425°E / 22.6728; 89.7425
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கார் பள்ளிவாசல்
সিংগাইর মসজিদ
பள்ளிவாசலின் கிழக்குப் பகுதி
அடிப்படைத் தகவல்கள்
புவியியல் ஆள்கூறுகள்22°40′22″N 89°44′33″E / 22.6728°N 89.7425°E / 22.6728; 89.7425
சமயம்சுன்னி இசுலாம்
பேகர்காட்-குல்னா நெடுஞ்சாலையிலிருந்து பள்ளிவாசலின் தோற்றம்

சிங்கார் பள்ளிவாசல் ( Singar Mosque) [note 1] என்பது 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஓர் பள்ளிவாசலாகும். இது வங்காளதேசத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள உலக பாரம்பரிய தளமான பேகர்காட் பள்ளிவாசல் நகரத்தின் ஒரு பகுதியாகும். இந்தப் பள்ளிவாசல் அதன் ஒற்றைக் குவிமாடம் கொண்ட சதுர அமைப்பால் வெளிப்படும் செங்கற்களால் கட்டப்பட்டு சுடுமண் அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்[தொகு]

சிங்கார் பள்ளிவாசல் உண்மையில் வங்காளதேசத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் நகரமான பாகர்காட்டின் ஒரு அங்கமாகும்.[1] பாகர்காட்-குல்னா நெடுஞ்சாலையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இது அறுபது தூண் பள்ளிவாசலுக்கு தென்கிழக்கே சுமார் 200 மீட்டர் (660 அடி) தொலைவில் அமைந்துள்ளது.[2]

வரலாறு[தொகு]

அதன் சரியான கட்டுமான தேதியை நிறுவ சிங்கார் பள்ளிவாசலில் எந்த கல்வெட்டுகளும் இல்லை. ஆனாலும், 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கட்டிடக் கலைஞர் அபு சயீத் எம் அகமது மதிப்பிடுகிறார்.[3] இதே பாணியிலுள்ள ஒத்த உள்ளூர் கட்டிடங்களின் அறியப்பட்ட வயதுகளின் அடிப்படையில் பிற வல்லுநர்கள், இது 15 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டதாக, நம்புகிறார்கள்.[4][5][6] ஒரு காலத்தில் பள்ளிவாசல் வளாகம் மூலைகளில் கோபுரங்கள் மற்றும் கிழக்கில் ஒரு நுழைவு வாயில் கொண்ட சுவரால் சூழப்பட்டதாக ஒரு சான்று உள்ளன.[5][7]

1970களின் முற்பகுதியில் பள்ளிவாசலின் நிலை "முற்றிலும் அழிந்த நிலையில்" உள்ளதாக வங்காளப்பீடியா விவரிக்கிறது. அரசாங்கத்தின் தொல்லியல் துறை [6] 1984 ஆம் ஆண்டில், தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஜோஹன்னா ஈ. வான் லோஹுய்சென் டி லீவ், கட்டிடம் ஓரளவு புதுப்பிக்கப்பட்டதாக எழுதினார், ஆனால் "அதன் மூலை கோபுரங்கள் இன்றும் சேதமடைந்த நிலையிலேயே உள்ளன". [7] சிங்கார் பள்ளிவாசலின் ஒரு பகுதியாக இருக்கும் பாகர்காட் பள்ளிவாசல் நகரம் [1] 1985 இல் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இடம்பெற்றது.ref name="whc" /> இது 2010 களில் "நல்ல பாதுகாப்பில்" இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டது. [6]

சுல்தானிய கட்டிடக்கலையின் சிறப்பியல்புடன் அமையப்பெற்றுள்ள சிங்கார் பள்ளிவாசல்.

குறிப்புகள்[தொகு]

  1. Transliterations vary. Signage on site spells it Singair. Perween Hasan uses Shingria and வங்காளப்பீடியா uses Singria, whereas most other sources use Singair.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Historic Mosque City of Bagerhat". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.
  2. "Singar Mosque". பார்க்கப்பட்ட நாள் 11 Oct 2019.
  3. Abu Sayeed M Ahmed (2006). Mosque Architecture in Bangladesh. Dhaka: UNESCO. பக். 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:984-32-3469-3. http://unesdoc.unesco.org/images/0015/001583/158361eo.pdf. 
  4. Hasan, Perween (2007). Sultans and Mosques: The Early Muslim Architecture of Bangladesh. I.B. Tauris. பக். 125–127. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84511-381-0. 
  5. 5.0 5.1 Alamgir, Khoundkar (2008–2009). "Single Unit Square Type Sultanate Buildings of Bengal". Journal of Bengal Art 13–14: 241. https://www.academia.edu/12747160. 
  6. 6.0 6.1 6.2 Bari, M. A. (2012). "Singra Mosque". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Singra_Mosque. 
  7. 7.0 7.1 van Lohuizen de Leeuw, Johanna E. (1984). "The early Muslim monuments at Bagerhat". in Michell, George. The Islamic Heritage of Bengal. UNESCO. பக். 176. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:92-3-102174-5. http://unesdoc.unesco.org/images/0006/000604/060439eo.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கார்_பள்ளிவாசல்&oldid=3847267" இலிருந்து மீள்விக்கப்பட்டது