சாலமன் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாலமன் நடவடிக்கை
பகுதி: எத்தியோப்பிய உள்நாட்டுப் போர்

சிதிலமடைந்த யூத ஜெப ஆலயம்
இடம் எத்தியோப்பியா-இஸ்ரேல்
திட்டமிடல் இஸ்ரேல் அரசு மற்றும் பாதுகாப்புப் படைகள்
இலக்கு எத்தியோப்பியாவில் வாழ்ந்த பெட்டா யூதர்களை வான்படைகள் மூலம் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லுதல்
திகதி மே 24, 1991 (1991-05-24)
விளைவு 36 மணி நேரத்தில் 14,325 எத்தியோப்பிய யூதர்களை வான்படை வானூர்திகள் மூலம் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சாலமன் நடவடிக்கை (Operation Solomon) (எபிரேயம்: מבצע שלמה‎, எத்தியோப்பிய உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட எத்தியோப்பிய யூதர்களை 24 மே 1991 முதல் 25 மே 1991 ஆகிய இரண்டு நாட்களுக்குள், 36 மணி நேரத்தில் இஸ்ரேல் தனது வான்படை வானூர்திகள் மூலம் இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்தச் செல்லப்பட்டனர்.[1][2][3][4]

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த யூதர்களை இஸ்ரேல் நாட்டிற்கு திரும்ப அழைத்துச் செல்லும் அலியா செயல்பாட்டில் சாலமன் நடவடிக்கை மூன்றாவதாகும். சாலமன் நடவடிக்கைக்கு முன்னர் 8,000 எத்தியோப்பிய யூதர்களை மோசஸ் நடவடிக்கை மூலம் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னணி[தொகு]

1991ல் மெங்கிஸ்து ஹைலி மரியாம் தலைமையிலான எத்தியோப்பிய அரசை, எரித்திரியா மற்றும் திக்ரே தீவிரவாதிகள் கிளர்ச்சி செய்து கவிழ்த்தனர். இதனால் எத்தியோப்பியாவில் அரசியல் நிலைத்தன்மை இல்லாது போனதால், எத்தியோப்பியா யூதர்களின் நிலை கவலைக்கிடமானது. எத்தியோப்பியா யூதர்கள் ஆபத்தில் வாழ்கிறார்கள் என்று எத்தியோப்பியன் யூதர்களுக்கான அமெரிக்க சங்கத்தின் தலைவர்கள், அமெரிக்க அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்த பிறகு, ஐக்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசு இணைந்து சாலமன் நடவடிக்கையில் ஈடுபட்டது. எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா வானூர்தி நிலையத்திலிருந்து எத்தியோப்பிய யூதர்களை, இஸ்ரேல் நாட்டின் வான்படை வானூர்திகள் மூலம் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Operation Solomon". www.jewishvirtuallibrary.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-31.
  2. Brinkley, Joel (May 26, 1991). "Ethiopian Jews and Israelis Exult as Airlift Is Completed". The New York Times. https://www.nytimes.com/1991/05/26/world/ethiopian-jews-and-israelis-exult-as-airlift-is-completed.html. 
  3. "Operation Solomon". www.zionism-israel.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-01.
  4. "Most passengers on an aircraft". Guinness World Records. பார்க்கப்பட்ட நாள் 2020-07-12.
  5. Pertman, Adam (30 June 1991). "Wandering no more For the thousands of Ethiopian Jews who have immigrated to Israel over the last two decades, assimilation has been a wrenching process. Yet they are fulfilling a lifelong dream to live in the Holy Land, and they have a few regrets". Boston Globe. ProQuest 294602131. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலமன்_நடவடிக்கை&oldid=3678205" இலிருந்து மீள்விக்கப்பட்டது