சார் கானோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சார் கானர் (Saar Ganor) இசுரேலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் யோசெப் கார்பிங்கலுடன் சேர்ந்து, கிர்பெட் கியாபாவில் அகழ்வாராய்ச்சியின் இயக்குநராக இருந்தார். இந்த அகழ்வாராய்ச்சி விவிலிய சராயிம் என்று கருதப்படுகிறது. [1] இவர் இசுரேல் தொல்பொருட்கள் ஆணையத்தின் ஆய்வாளராகவும், எருசலேமின் கீப்ரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் உள்ளார்.

2003 ஆம் ஆண்டில் கிர்பெட் கியாபாவில் உள்ள சுவர்களின் அசாதாரண அளவை கானர் கவனித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் கார்பிங்கலைப் பார்க்கும்படி வற்புறுத்தினார். மேலும் 2007 ஆம் ஆண்டு பூர்வாங்க தோண்டலுக்குப் பிறகு, அவர்கள் 2008 ஆம் ஆண்டு கோடையில் ஆர்வத்துடன் வேலை செய்யத் தொடங்கினர். ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் இதுவரை 4 சதவீதத்தை மட்டுமே தோண்டி எடுத்துள்ளனர். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bronner, Ethan - Find of Ancient City Could Alter Notions of Biblical David, New York Times, October 29, 2008
  2. The Associated Press - Have Israeli archaeologists found world's oldest Hebrew inscription? Haaretz.com, Oct. 30, 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்_கானோர்&oldid=3865814" இலிருந்து மீள்விக்கப்பட்டது