சார்லசின் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெப்பநிலைக்கும் கனவளவிற்கும் இடையிலான தொடர்பினை விளக்கும் இயங்குபடம்.

சார்லசின் விதி ( கனவளவு விதி என்றும் அறியப்படுகிறது) ஒரு பரிசோதனை வாயு விதி ஆகும். இது வாயுக்களை வெப்பமாக்கும் போது எவ்வாறு விரிவடைய முனைகின்றன என்பதை விளக்குகிறது.

சார்லசின் விதியினைப் பற்றிய தற்காலத்தைய கூற்று:

நிலையான அமுக்கத்தில் குறித்த திணிவு வாயுவின் கனவளவானது, தனிவெப்பநிலை அளவுகோல் வெப்பநிலையின் அதே காரணியினால் அதிகரிக்கும் அல்லது குறைவடையும் (அதாவது வெப்பநிலை அதிகரிப்பிற்கேற்ப வாயு விரிவடையும்).[1]

இது பின்வருமாறு எழுதப்படலாம்:

V \propto T\,

இங்கு V என்பது வாயுவின் கனவளவு; T என்பது தனிவெப்பநிலை. இவ்விதியினை பின்வருமாறும் வெளிப்படுத்தலாம்:

\frac{V_1}{T_1} = \frac{V_2}{T_2} \qquad \mathrm{or} \qquad \frac {V_2}{V_1} = \frac{T_2}{T_1} \qquad \mathrm{or} \qquad V_1 T_2 = V_2 T_1.

இச்சமன்பாடானது தனிவெப்பநிலை அதிகரிக்கும் போது அதற்கு நேர்விகித சமனாக வாயுவின் கனவளவும் அதிகரிக்கும் என்பதைக் காட்டுகிறது.

மேற்கோள்களும் குறிப்புக்களும்[தொகு]

  1. Fullick, P. (1994), Physics, Heinemann, pp. 141–42, ISBN 0-435-57078-1 .
"http://ta.wikipedia.org/w/index.php?title=சார்லசின்_விதி&oldid=1478450" இருந்து மீள்விக்கப்பட்டது