சான்சே இல்ல

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"சான்சே இல்ல"
படிமம்:Anirudh Chancey illa.jpg
அனிருத் ரவிச்சந்திரன் இன் இசையில்
வெளியீடு1 ஆகஸ்ட் 2014
வடிவம்எண்முறை பதிவிறக்கம்
நீளம்3:43
எழுத்தாளர்(கள்)விக்னேஷ் சிவன்

சான்சே இல்ல அனிருத் ரவிச்சந்திரன் என்னும் இசையமைப்பாளர் நடித்து வெளியிட்ட இசை ஆல்பமாகும். இந்த ஆல்பம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகரைப் புகழும் வண்ணம் வெளியிடப்பட்டது.

பின்னணி[தொகு]

சென்னை மாநகரம் ஆங்கிலேயர் காலம் முதல் முக்கிய வர்த்தக மையமாகவும் கலாச்சார மையமாகவும் விளங்குகிறது. மற்ற எந்த ஊருடனும் ஒப்பிட்டாலும் சென்னை போன்ற ஒரு நகரம் இருக்க வாய்ப்பே இல்லை (சான்சே இல்ல) என்னும் அர்த்தத்தில் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலைத் தமிழ் திரையுலக இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்து நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் என்னும் இயக்குனர் இந்தப் பாடலை எழுதி இயக்கியுள்ளார். இதன் ஒளிப்பதிவாளர் வில்லியம் சி.ஜார்ஜ்.[1][2].

வெளியீடு[தொகு]

"சான்சே இல்ல" பாடல் யூ டியூப் இணையதளத்தில் 1 ஆகஸ்ட், 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

பாடல் வரிகள்[தொகு]

நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும்
உன்ன சொந்தமாக்கும்டா
அதுதான் இந்த ஊருடா
இந்த பீச் காத்து மேல பட்டா போதும்டா
உனக்கு நல்ல ராசிடா
இனி சென்னை வாசிடா
வா வா வந்து ஆட்டோல ஏறி பாத்தியா
அண்ணன் சொல்லும் ஊரோட வரலாற கேட்டீயா?
மைலாப்பூர் பில்ட்டர் காப்பி வாசம் தூக்குதா
மவுண்ட் ரோடு டிராபிக்கோட இசைதான் கேக்குதா
மச்சான் சான்சே இல்ல இல்ல சான்சே இல்ல
நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல
மச்சான் சான்சே இல்ல இல்ல சான்சே இல்ல
நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல
கோடம்பாக்கம் உள்ள போய் ஷூட்டிங்கத்தான் பாக்கவா
இல்ல தி.நகர் உள்ள போய் புடிச்சத வாங்கவா
அந்த பாடிகாட் முனீஸ்வரன் பிலஸ்ஸிங்கத்தான் கேக்கவா?
எட்டு இ.சி.ஆரு ஓ.எம்.ஆரு ஸ்பீடா வண்டி ஓட்டவா?
சூப்பர் ஸ்டாரோட பர்ஸ்டே பர்ஸ்ட் ஷோ வா?
சென்னை சூப்பர் கிங்குக்கு விசில போடவா?
நம்ம லவ்வ வளத்த
வாழ வைக்குற, பெசன்ட் நகர் பீச்சோட புகழ பாடவா?
மச்சான் சான்சே இல்ல இல்ல சான்சே இல்ல
நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல
மச்சான் சான்சே இல்ல இல்ல சான்சே இல்ல
நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல
வா நண்பா வா வாடா வா
வா ஒன்னா சேர்ந்தாட வா
சென்னை லைஃப நல்லா கொண்டாட வா
இது நம்ம ஊருடா
இன்னும் கத்தி கத்து சொல்லுடா
இந்த வாழ்க எங்கும் அமையாதடா
மச்சான் சான்சே இல்ல இல்ல சான்சே இல்ல
நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல
மச்சான் சான்சே இல்ல இல்ல சான்சே இல்ல
நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.indiaglitz.com/anirudh-shooting-for-chancey-illa-tamil-news-108548
  2. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Anirudhs-Chance-Ey-Illa-crosses-1-Lakh-in-day/articleshow/39482582.cms
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்சே_இல்ல&oldid=3553620" இலிருந்து மீள்விக்கப்பட்டது