சாகாகுச்சி சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாகாகுச்சி சோதனை (Sakaguchi test) என்பது புரதங்களில் ஆர்கினின் என்ற ஆல்ஃபா- அமினோ அமிலம் இருப்பதைக் கண்டறிய உதவும் ஓரு வேதியியல் சோதனை ஆகும். சப்பானிய உணவு விஞ்ஞானியும் கரிம வேதியியலாளருமான சோயோ சாகாகுச்சி (1900-1995) என்பவர் 1925 ஆம் ஆண்டில் இந்த சோதனையைக் குறித்து விவரித்தார் [1]. எனவே இச்சோதனை சாகாகுச்சி சோதனை என அழைக்கப்படுகிறது. சாகாகுச்சி வினைப்பொருள் 1-நாப்தால் மற்றும் ஒரு சொட்டு சோடியம் ஐப்போபுரோமைட்டு சேர்ந்தது சாகாகுச்சி வினைப்பொருள் ஆகும். ஆர்கினினில் உள்ள குவானிடின் தொகுதி சாகாகுச்சி வினைப்பொருளுடன் வினைபுரிந்து சிவப்பு நிற அணைவாக உருவாகிறது [2][3][4][5].

மேற்கோள்கள்[தொகு]

  1. Sakaguchi, S (1925), "Über eine neue Farbenreaktion von protein und arginin", J. Biochem., 5: 25–31
  2. Chatterjea (1 January 2004). Textbook of Biochemistry for Dental/Nursing/Pharmacy Students. Jaypee Brothers Publishers. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8061-204-6.
  3. R.A. Joshi (2006). Question Bank of Biochemistry. New Age International. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-224-1736-4.
  4. Dandekar (1 January 2004). Practicals And Viva In Medical Biochemistry. Elsevier India. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8147-025-6.
  5. Debajyoti Das (1980). Biochemistry. Academic Publishers. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80599-17-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகாகுச்சி_சோதனை&oldid=2749418" இலிருந்து மீள்விக்கப்பட்டது