சவோய் திரையரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவோய் திரையரங்கம்
Savoy Cinema, Colombo
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைசெயல்பாட்டில்
இடம்வெள்ளவத்தை, கொழும்பு
முகவரிகாலி சாலை, வெள்ளவத்தை
நாடுஇலங்கை
ஆள்கூற்று6°52′41.88″N 79°51′28.45″E / 6.8783000°N 79.8579028°E / 6.8783000; 79.8579028
திறக்கப்பட்டதுஆகத்து 1949; 74 ஆண்டுகளுக்கு முன்னர் (1949-08)
உரிமையாளர்இ.ஏ.பி திரைப்பட நிறுவனம்
வலைதளம்
EAP Films

சவோய் திரையரங்கம் (Savoy Cinema) அல்லது சவோய் முப்பரிமாண திரையரங்கம் (Savoy 3D Cinema) இலங்கையில் உள்ள ஒரு திரையரங்கமாகும். சவோய் திரையரங்கம் என்றும் இது அழைக்கப்படுகிறது. கொழும்பின் புறநகர்ப் பகுதியான வெள்ளவத்தையின் பரபரப்பான காலி சாலையில் ஆமில்டன் கால்வாய்க்கு அருகில் இத்திரையரங்கம் அமைந்துள்ளது.[1][2] இத்திரையரங்கம் இ.ஏ.பி திரைப்பட நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். [3][4] பொதுவாக ஆங்கிலம், சிங்களம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழித் திரைப்படங்கள் இங்கு திரையிடப்படுகின்றன. [5]

1949 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் தி இயோல்சன் இசுடோரி என்ற திரைப்பட்த்தின் முதல் காட்சியுடன் திரையரங்கம் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் சி. வி. டி சில்வா என்பவருக்குச் சொந்தமானதாக இருந்தது. அவரே இத்திரையரங்கத்தை இயக்கினார். இலண்டனில் உள்ள சவோய் திரையரங்கத்தின் பெயரால் ஈர்க்கப்பட்டு இப்பெயரை அவர் தன் திரையரங்கத்திற்கு சூட்டினார். அசலான கட்டிடத்தில் முன்பக்கத்தில் ஒரு சிறிய புத்தகக் கடையும் காலி வீதியை எதிர்கொள்ளும் பல கடைகளும் இருந்தன. இதில் ஒரு துணிக்கடை, மருந்துகள் மற்றும் மளிகைப் பொருட்களைக் கையாளும் சவோய் எம்போரியம் ஆகியவையும் அடங்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Muller, Carl (2000). Colombo: A Novel. Penguin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789351181583.
  2. Goonewardena, C. T. (1969). A to Z Atlas of Colombo City. Survey Department. p. 47.
  3. "EAP Films and Theatres Private Limited". www.eapmovies.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-24.
  4. "Savoy Cinema (Colombo) - 2019 All You Need to Know BEFORE You Go (with Photos)". TripAdvisor (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-24.
  5. "Savoy Cinemas screens Captain Marvel in English and Tamil for the first time in Sri Lanka". www.dailymirror.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவோய்_திரையரங்கம்&oldid=3630236" இலிருந்து மீள்விக்கப்பட்டது