சவீர் தாராபூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சவீர் தாராபூர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சவீர் கேகி தாராபூர் | |||
| பிறப்பு | 26 திசம்பர் 1957 | |||
| கொல்கத்தா, இந்தியா | ||||
| வகை | நடுவர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை மட்டையாளர் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வீச்சு கழல் திருப்பம் | |||
| நடுவராக | ||||
| தேர்வு நடுவர் | 0 (-–-) | |||
| ODIs umpired | 9 (1999–நடப்பு) | |||
| IT20s umpired | 2 (2009–நடப்பு) | |||
| தரவுகள் | ||||
| முதல்தரம் | ||||
| ஆட்டங்கள் | 6 | |||
| ஓட்டங்கள் | 20 | |||
| ஓட்ட சராசரி | 5.00 | |||
| 100கள்/50கள் | 0/0 | |||
| அதியுயர் ஓட்டங்கள் | 15 | |||
| பந்துவீச்சுகள் | 474 | |||
| விக்க்கெட்ட்டுகள் | 9 | |||
| பந்துவீச்சு சராசரி | 37.66 | |||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | |||
| 10 விக்//ஆட்டம் | 0 | |||
| சிறந்த பந்துவீச்சு | 2/38 | |||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/– | |||
|
19 திசம்பர், 2009 தரவுப்படி மூலம்: Cricinfo |
||||
சவீர் தாராபூர் (Shavir Tarapore), (பிறப்பு 26 திசம்பர் 1957), ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களிலும் இருபது20 துடுப்பாட்டங்களிலும் செயலாற்றிவரும் ஓர் இந்தியத் துடுப்பாட்ட நடுவர். 1999ஆம் ஆண்டில் முதல் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் துவங்கி இதுவரை 9 ஒ.ப.து ஆட்டங்களிலும் இரண்டு இருபது20 ஆட்டங்களிலும் செயலாற்றியுள்ளார்.
மேலும் கர்நாடக மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக 1980/81 முதல் 1986/87 வரை ஆடியுள்ளார். ஆறு ஆட்டங்களில் 20 ஓட்டங்கள் எடுத்துள்ளார். தனது கழல்திருப்பப் பந்துவீச்சால் ஒன்பது விக்கெட்களை 37.66 என்ற சராசரியில் எடுத்துள்ளார். மூன்று பந்துகளை பிடித்து மட்டையாளரை வெளியேற்றியுள்ளார்.
சுரேஷ் சாத்திரிக்கு மாற்றாக ப.து.அவின் பன்னாட்டு நடுவர் குழாமில் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளார்.