சர்தார் அம்ஜத் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்தார் அம்ஜத் அலி
மக்களவை உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1970–1972
மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1972–1978

சர்தார் அம்ஜத் அலி (Sardar Amjad Ali)(பிறப்பு 1943) ஒரு இந்திய அரசியல்வாதியும் அரசதந்திரியும் ஆவார். கீழை இந்தியாவின் சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவர். வங்காள காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி 1970-ஆம் ஆண்டில் பாசிர்ஹாட்டில் இருந்து மக்களவை உறுப்பினராகப் பணியாற்றியவர் ஆவார். இவர் 1972-ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தி குடும்பத்தின் நெருங்கிய உதவியாளரான இவர், 9 ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்பட்டார். இவர் பார் கவுன்சிலின் தலைவராக பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், கிழக்கு இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவர் ஆவார். [1] [2] [3] இவர் 2010-ஆம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். இவர் 2011- ஆம் ஆண்டில் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாசிர்ஹட் உத்தர் தொகுதியில் போட்டியிட்டார். [4] [5] இவர் 1972 முதல் 1978 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார் [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members : Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
  2. "Bengal Congress leaders want state unit chief replaced | India News - Times of India". பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
  3. "Shri Sardar Amjad Ali MP biodata Basirhat | ENTRANCEINDIA". பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
  4. "হাইকোর্টেও শক্তি বৃদ্ধি তৃণমূলের, ঘাসফুল শিবিরে আইনজীবী সরদার আমজাদ আলী-অশোক কুমার ঢনঢনিয়া". பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
  5. "Sardar Amjad Ali(All India Trinamool Congress(AITC)):Constituency- BASIRHAT UTTAR(NORTH 24 PARGANAS) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
  6. "Members of Rajya Sabha".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்தார்_அம்ஜத்_அலி&oldid=3870497" இலிருந்து மீள்விக்கப்பட்டது