சரிதா குரானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரிதா குரானா
Sarita Khurana
பிறப்புஇலண்டன், இங்கிலாந்து
தேசியம்அமெரிக்கா
கல்விஓபரின் கல்லூரி
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
விருதுகள்"ஆல்பர்ட் மேஸ்லஸ் புதிய ஆவணப்பட இயக்குனர் விருது" திரிபெகா திரைப்பட விழா 2017

சரிதா குரானா (Sarita Khurana) புரூக்ளின் உள்ள திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். குரானாவின் திரைப்படங்கள் தெற்காசியக் கதைகளைப் பெண் கண்ணோட்டத்தில் ஆராய்கின்றன. இடம்பெயர்வு, நினைவகம், பண்பாடு, பாலினம் ஆகியவை இவரது பொதுவான கருப்பொருள்கள் ஆகும். குரானா தன்னுடன் இணைந்து பங்களிக்கும் சுமிருதி முந்த்ராவுடன் டிரிபெகா திரைப்பட விழாவில் ஆல்பர்ட் மேஸ்லெசு புதிய ஆவணப்பட இயக்குநர் விருதை வென்ற முதல் தேசி பெண் ஆவார்.[1][2][3][4][5][6][7][8][9][10]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

சரிதா குரானா இங்கிலாந்தின் இலண்டனில் 1970-ல் பிறந்தார். மேலும் நியூயார்க் நகரில் வளர்ந்தார்.[11][9] நியூயார்க்கில் வளரும்போது இவர் கலைகளிலும் குறிப்பாகத் திரைப்படத்திலும் ஆர்வம் காட்டினார்.[11] திரைப்படத்தில் ஆசியப் பெண்கள் மற்றும் குடியேறியவர்களின் பிரதிநிதித்துவம் இல்லாததால் அல்லது தவறாகச் சித்தரிக்கப்பட்டதில் இவர் விரக்தியடைந்தார்.[11] 1990களின் நடுப்பகுதியில் நியூயார்க்கில் பணியாற்றிய தெற்காசியக் கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் செல்வாக்கு மிக்க குழுவில் குரானா இருந்தார்.[12] குரானா ஓபர்லின் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கலைப் பள்ளியிலிருந்து திரைப்படத்தில் நுண்கலைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.[13][6][8][9] கோர்வின் அச்சகம் வெளியிட்ட சாரா கில்லின் 2007 பாடல் திரட்டில், ஆப்டர் ஸ்கூல் மேட்டர்ஸ்: கிரியேட்டிவி புரோகிராம்சு தேட் கனெக்ட் யூத் டெவலப்மண்டு அண்டு ஸ்டுடண்ட் அச்சிவ்மெண்ட் குரானா கட்டுரையை வழங்கினார்.[14]

பணி மற்றும் விருதுகள்[தொகு]

சரிதா குரானா ஒரு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பண்பாட்டுத் தயாரிப்பாளர். குரானாவின் கதை, ஆவணப்படம் மற்றும் சோதனைத் திரைப்படம் முதலியன பன்னாட்டு அளவில் டிரிபெகா திரைப்பட விழா,[5] ஷெஃபீல்ட் டாக்/ஃபெஸ்ட், பி. எப். ஐ. இலண்டன் திரைப்பட விழா, மும்பை திரைப்பட விழா மற்றும் அமெரிக்கத் திரைப்பட நிறுவன-டாக்ஸ் திருவிழா ஆகியவற்றில் திரையிடப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த திரிபெகா திரைப்பட விழாவில் மதிப்புமிக்க ஆல்பர்ட் மேஸ்லஸ் புதிய ஆவணப்பட இயக்குநர் விருது மற்றும் பியூ நிதியுதவி உட்படப் பல விருதுகளைக் குரானா பெற்றுள்ளார்.[15][7] 2015-ல் குரானா வெர்மான்ட்டில் உள்ள ஊடக உறைவிட நிதியுதவியின் பெண்கள் விருதைப் பெற்றார்.[16] குரானா 2019ஆம் ஆண்டில் ஆசியப் பெண்கள் வழங்கும் வட்டத்திலிருந்து மானியத்தையும், 2020ஆம் ஆண்டில் ஆசிய அமெரிக்க ஊடக மையத்தின் நிதியினையும் பெற்றார்.[17]

சரிதாவின் பணிக்கு திடிரிபெகா திரைப்பட நிறுவனம், ஆசிய அமெரிக்க ஆவணப்பட வலையமைப்பு, பன்னாட்டு ஆவணப்பட சங்கம், ஆசிய அமெரிக்க ஊடக மையம், இந்தியத் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம், திரைப்படத்தில் பெண்கள், திரைப்பட சுதந்திரம், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் நியூயார்க்கு பெண்கள், த நியூயார்க் டைம்ஸ் மற்றும் ஆசியப் பெண்கள் வழங்கும் வட்டம் ஆதரவு அளித்துள்ளன.[1][6][8][10][11][18][19][20][21]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Shattuck, Kathryn (2018-04-06). "This Week: Getting Crafty in the Bronx, 'Paterno,' Eric B. & Rakim on Tour" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2018/04/06/arts/bronx-arts-paterno-eric-b-rakim.html. 
  2. "Directors use film to speak on social issues at 2017 Tribeca Film Festival". NBC News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-15.
  3. Schager, Nick (2017-04-23). "Film Review: 'A Suitable Girl'". Variety (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
  4. McHenry, Jackson. "Keep the Change, Son of Sofia, and Bobbi Jene Top Tribeca Film Festival Awards". Vulture (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
  5. 5.0 5.1 Scheck, Frank (24 April 2017). "'A Suitable Girl': Film Review | Tribeca 2017". The Hollywood Reporter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.Scheck, Frank (24 April 2017). "'A Suitable Girl': Film Review | Tribeca 2017". The Hollywood Reporter. Retrieved 2020-05-21.
  6. 6.0 6.1 6.2 Bender, Abbey (2018). "A Suitable Girl". Pine Magazine No 2: 108–110. 
  7. 7.0 7.1 Rao, Sameer (2017-04-28). "Award-Winning Desi Directors Tackle Arranged Marriage Stigma in 'A Suitable Girl'". Colorlines (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-20.
  8. 8.0 8.1 8.2 Hubbard, Sally (2018-10-23). "Women Killing It". Women You Should Know® (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-01-25. பார்க்கப்பட்ட நாள் 2020-04-14.
  9. 9.0 9.1 9.2 Hammonds, Loren. "A Suitable Girl | 2017 Tribeca Film Festival". Tribeca. பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
  10. 10.0 10.1 Allen, Joseph (21 April 2017). "Tribeca 2017 Women Directors". womenandhollywood.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-25.
  11. 11.0 11.1 11.2 11.3 "Cultural Journey Spotlight: An Interview with "A Suitable Girl" Directors Sarita Khurana & Smriti Mundhra". Heartland Film (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-08-14. பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
  12. Madhulika S, Khandelwal (2018). Becoming American, Being Indian: An Immigrant Community in New York City. Ithaca and London: Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0801440434.
  13. "Alumni Spotlight Interview". Columbia University School of the Arts. பார்க்கப்பட்ட நாள் 21 May 2020.
  14. Hill, Sara L.; Hill, Sara Louisa (2008). Afterschool Matters: Creative Programs That Connect Youth Development and Student Achievement (in ஆங்கிலம்). SAGE Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4129-4124-2.
  15. Kushangi, Shrithika (14 Mar 2020). "Indian American Filmmakers Sarita Khurana and Anula Shetty Named as 2020 CAAM Fellows". www.wishesh.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
  16. "NALIP Announces 10 Selected Projects for 2015 Diverse Women in Media Residency Lab at Artist Retreat Center in Vermont, October 3-11". NALIP. September 25, 2015. பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
  17. "Indian American Filmmakers Sarita Khurana, Anula Shetty Named 2020 CAAM Fellows". India West (in ஆங்கிலம்). Archived from the original on 2020-07-20. பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
  18. "Asian Women Giving Circle Gives $78,000 in Grants to Nine NYC-Based Artists and Projects". Ms. Foundation for Women (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-07-24. பார்க்கப்பட்ட நாள் 2020-05-15.
  19. Lee, Ashley (18 April 2017). "'A Suitable Girl' Doc Explores Arranged Marriage in India (Exclusive Video)". The Hollywood Reporter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
  20. Das, Kavita. "Analysis | India has changed a lot in 70 years. But arranged marriage remains the norm." (in en). Washington Post. https://www.washingtonpost.com/news/soloish/wp/2017/05/02/india-has-changed-a-lot-in-70-years-but-arranged-marriage-remains-the-norm/. 
  21. "AWGC Grantees Work in Response to the COVID-19 Crisis". Asian Women Giving Circle (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-05-01. பார்க்கப்பட்ட நாள் 2021-06-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிதா_குரானா&oldid=3731779" இலிருந்து மீள்விக்கப்பட்டது