சம்பூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்பூர் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இவ்வூர் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டது. மூதூர் நகரிலிருந்து 5 கிமீ தொலைவிலுள்ள சம்பூர் பிரதேசம் 2 கிராம அதிகாரி பிரிவுகளைக் கொண்டு 35.9 எக்டயர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
சம்பூரண வளம் கொண்டமையால் சம்பூரணம் எனவும் பின்னர் திரிபடைந்து சம்பூர் எனவும் பெயர் பெற்றது என்றொரு கருத்துண்டு. சம்பூர் வயல்கள் நிறைந்ததும் கடல் மற்றும் குளங்களை கொண்டதுமான அழகிய கிராமமாகும். அத்தோடு இப்பிரதேசத்தில் உள்ள மற்றய கிராமங்களுக்கும் எடுத்துக்காட்டாக உள்ள ஒரு கிராமமாகும்
இங்கு பிறந்து புகழ் பெற்றோர் [தொகு]
- கோ. அமிர்தலிங்கம் (விரிவுரையாளர், கொழும்பு பல்கலைக்கழகம்)