சத்தியஞான போதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சத்தியஞான போதம் என்னும் நூல் சிவஞான வள்ளல் என்பவரால் 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதனைச் ‘சத்தியஞானப் போதத் தமிழ்’ என்று இந்த நூலின் பாயிரம் கூறுகிறது. ‘வள்ளலார் சாத்திரம்’ என்னும் பெயரில் இவரது 20 நூல்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று வெளிவந்துள்ளது. இந்த நூல் பதி பசு பாசம் பற்றிக் கூறுகிறது என்றாலும் இந்த நூலின் கொள்கை வேதாந்தமே.

பிரம கீதையைப் பேசினவன்
மறலியை முனிந்தவன்
நான்முகத்திலிருந்து நான்மறை உரைத்தவன்
உபநிடதத்தில் ஒலித்தவன்
யானைக்கு அருளியவன்
பிரகலாதனுக்கு வெளிப்பட்டவன்
துருபதன் மகள் துரோபதிக்குத் துகில் ஈந்தவன்
அருச்சுனனுக்கு அமரிடை ஞானம் தந்தவன்
கல்லாலின் கீழ் ஞானம் புரிந்தவன்
முப்புரம் எரித்தவன்

அவனே பிரமம். இப்படி இந்த நூல் மும்மூர்த்திகளையும் ஒரே பிரமம் எனக் காட்டுகிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் சைவ சமயக் குரவரின் நூல்கள் பிறவிநோய் தீர்க்கும் மருந்து என்று இந்த நூல் குறிப்பிடுகிறது.

கருவிநூல்[தொகு]

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியஞான_போதம்&oldid=1276198" இலிருந்து மீள்விக்கப்பட்டது