கோ. ரா. கோபிநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத்
கோ. ரா கோபிநாத்(இடது), 2019
பிறப்பு13 நவம்பர் 1951 (1951-11-13) (அகவை 72)[1]
மெல்கோட்டா, மாண்டியா, கர்நாடகா, இந்தியா
தேசியம்இந்தியன்
கல்விஇந்திய இராணுவ பள்ளி(Indian Military Academy)

பிஜப்பூர் சைனிக் பள்ளி(Sainik School, Bijapur)

தேசிய பாதுகாப்பு பள்ளி(National Defence Academy)
பணிஏர் டெக்கான்(Air Deccan) நிறுவனர், ஓய்வு பெற்ற இந்திய இராணுவ தளபதி, எழுத்தாளர், அரசியல்வாதி
அறியப்படுவதுஏர் டெக்கான்(Air Deccan) நிறுவனர்
வாழ்க்கைத்
துணை
பார்கவி கோபிநாத்
பிள்ளைகள்பல்லவி கோபிநாத் கிருத்திகா கோபிநாத்
விருதுகள்1996 ரோலக்ஸ் விருது,

2005 இராஜ்யோட்சவ விருது(கர்நாடகா), 2007 செவாலியே விருது (பிரான்ஸ்), தசாப்தத்தின் ஆளுமை(கே ஜி பவுண்டேசன்),

சர் எம் விஷ்வேசரய்யா நினைவு விருது.

கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத் [2] [3] ஒரு இந்திய தொழில்முனைவோர், [4] ஏர் டெக்கான்(Air Deccan) நிறுவனர், இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற கேப்டன், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. [1] [5] [6]

பின்னணி மற்றும் ஆரம்ப வாழ்க்கை[தொகு]

கோபிநாத் நவம்பர் 13, 1951 அன்று மண்டியாவின் மெல்கோட்டில் பிறந்தார், கோரூரில் (கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு தொலைதூர கிராமம்) வளர்ந்தார். [1] அவருடன் பிறந்தவர்கள் அவருடன் சேர்த்து எட்டு பேர், அவர் இரண்டாமானவர். கோபிநாத்தின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர்; மற்றும் நாவலாசிரியர், பள்ளிக்கூடங்களில் சுதந்திரம் கிடைக்காது என்று நம்பிய அவர் ஆரம்பகால கல்வியை வீட்டிலேயே கற்பித்தார். இருப்பினும் சில காலம் தாமதமாக 1962ல் கன்னட வழி பள்ளியில் நேரடியாக ஐந்தாம் வகுப்பு சேர்ந்தார். பின்பு நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பிஜாப்பூரின் சைனிக் பள்ளியில் சேர்ந்தார். அப்பள்ளி கோபிநாத்துக்கு உதவி செய்து என்.டி.ஏ(NDA) தேர்வுக்கு அவரை தயார் செய்து தேர்ச்சி பெற வைத்தது. மூன்று வருட கடின பயிற்சிக்குப் பிறகு என்.டி.ஏ(NDA) வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் அவர் ஐ.எம்.ஏ.வில்(IMA) பட்டம் பெற்றார்.

வாழ்க்கை[தொகு]

படிப்பு முடிந்ததும் இந்திய இராணுவ ஆணை மூலம் கேப்டன் தரம் பெற்றார். அவர் எட்டு வருடங்கள் இந்திய இராணுவத்திற்க்கு சேவை செய்தார். அதில் 1971ல் நடைபெற்ற பங்களாதேஷ் சுதந்திர போரில்(Bangladesh Liberation War) பங்கு பெற்றார்.

இராணுவத்திலிருந்து விடுபட நினைத்த அவர் 28வது வயதில் விருப்ப ஓய்வு பெற்றார். இராணுவ பணிக்கு பிறகு, பட்டுப்பூச்சி வளர்ப்பு பண்ணையை நிறுவினார்; இயற்கையோடு இணைந்த அவரது புதுமையான முறைகளால் 1996ல் அவர் ரோலக்ஸ் விருதைப் பெற்றார். [1] அடுத்து, அவர் ஹாசனில் மல்நாட் மொபிவிக்(Enfield Dealership) மற்றும் ஹோட்டலை திறந்தார்.

1997ம் ஆண்டு டெக்கான் ஏவியேசன் என்ற பெயரில் உலங்கு வானூர்தி சேவையை தன்னுடைய பங்குதாரருடன் சேர்ந்து நிறுவினார். 2003ல் ஏர் டெக்கான்(Air Deccan) என்ற குறைந்த விலை வானூர்தி சேவை நிறுவனத்தை தொடங்கினார். இது 2007ல் கிங் ஃபிஷ்சர் வானூர்தி நிறுவனத்துடன் இணைந்தது. 2009ல் டெக்கான் 360(Deccan 360) என்ற சரக்கு வானூர்தி சேவை நிறுவனத்தை தொடங்கினார். துபாயை மையமாக கொண்ட யுனைடெட் ஏவியேசன் சர்வீசஸ்(United Aviation Services) மற்றும் பட்டேல் இன்டகரேடட் லாஜிஸ்டிக்ஸ் (Patel Integrated Logistics) ஆகிய நிறுவனங்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் படி 2013ல் டெக்கான் 360 மூடப்பட்டது.

2006ம் ஆண்டு பிரான்சு நாட்டின் உயரிய விருதான செவாலியர் டி லா லெஜியன் டி ஹானூர் விருது திரு கோபிநாத்திற்கு வழங்கப்பட்டது. ஏர் டெக்கனுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். [1]

2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் பெங்களூர் தெற்கு தொகுதிக்கு போட்டியிட்டார், ஆனால் தோற்கடிக்கப்பட்டார்.

2014 ஆம் ஆண்டில், அவர் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்றார் [7]

விமானத் தொழில்[தொகு]

டெக்கான் ஏவியேஷன்[தொகு]

1992ம் ஆண்டில் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவருடன் இராணுவத்தில் உடன் பணியாற்றிய நண்பரான கே. ஜெ. சாமுவேலை சந்தித்தார். சாமுவேல் ஃப்ரீலென்சர் எனப்படும் தேவைப்படும்போது மட்டும் பணியாற்றும் விமான ஓட்டுனராக இருந்தார் அதோடு வணிக ரீதியான ஹெலிகாப்டர் சேவையை வழங்க திட்டமிட்டுக் கொண்டிருந்தார். 1995ம் ஆண்டு இந்திய அரசு வானூர்தி சேவை மற்றும் தொழில் துறைக்கான தளர்வுகளை அறிவிக்கவே கோபிநாத், சாமுவேலுடன் இணைந்து டெக்கான் ஏவியேசன் நிறுவனத்தை தொடங்கினார்.[1] இந்நிறுவனம் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு சேவை வழங்கியதோடு, இலங்கை, நேபாளம், காபூல், மற்றும் தென் இந்தியாவில் பாதுகாப்பு மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. இந்த நிறுவனம் இந்தியாவிலும் இலங்கையிலும் மிகப்பெரிய தனியார் விமான சார்ட்டர் நிறுவனமாக வளர்ந்தது.

சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்(Southwest Airlines), அமெரிக்கா மற்றும் ரியானைர்(Ryanair), ஐரோப்பா போன்ற நிறுவனங்களின் குறைந்த விலை சேவையால் ஈர்க்கப்பட்டு 2003ம் ஆண்டு டெக்கான் ஏவியேசன், இந்தியாவின் முதல் குறைந்த விலை வானூர்தி சேவையான ஏர் டெக்கானை தோற்றுவித்தார். 2006ம் ஆண்டு பொதுப் பங்கு வெளியிட்ட ஏர் டெக்கான் அதன் பிறகு நட்டத்தை சந்தித்தது. அதைத் தொடர்ந்த வருடம் விஐய் மல்லையாவின நிறுவனமான யுனைடெட் பிவரேஜஸ் குழுமம் 26 சதவிகித பங்குகளை வாங்கியது. அந்த சமயத்தில் ஏர் டெக்கான் இந்தியாவின் அறுபத்து ஒன்பது மாநகர்களை இணைத்துக் கொண்டிருந்தது. [1] கூடிய விரைவிலேயே விஜய் மல்லையா ஏர் டெக்கான் மற்றும் கிங்ஃபிஷர் நிறுவனங்களை ஒன்றாக இணைத்தார், அதன்பின் கோபிநாத் தன் பங்குகள் பெரும் பகுதியை விற்றுவிட்டார்.

டெக்கான் சார்டர்[தொகு]

ஏர் டெக்கான் மற்றும் கிங்ஃபிஷர் இணைப்பின் போது ஹெலிகாப்டர் சேவையான டெக்கான் ஏவியேசன், 10 அக்டோபர் 2008ல் கால அட்டவணையில்லாத வான் சேவை அனுமதி(Non-scheduled Air Operator Permit - NSOP from DGCA) பெற்ற பின் டெக்கான் சார்டர் என்ற தனி நிறுவனமானது. அந்த காலகட்டத்தில் ஹெலிகாப்டர் சேவை திருப்திகரமாக இயங்கியது அதோடு எண்ணெய் துறைக்கு தன்னுடைய சேவையை அதிகரித்தது.. [8]

யு.பி. நிறுவன ஒப்பந்த விற்பனை முடிவில் கிடைத்த பணத்தை வைத்து டெக்கான் 360 என்ற நிறுவனத்தை மே 2009ல் தொடங்கினார். அந்நிறுவனமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி 2011ல் மூடப்பட்டது. அதே வருடம் கோபிநாத் டெக்கான் சார்டரின் 100% உரிமையாளரானார். [9] அதைத் தொடர்ந்த வருடத்தில் கோபிநாத், டெக்கான் சட்டில்ஸ் என்ற பெயரில் குஜராத்தில் தினசரி வானூர்தி சேவையை ஆரம்பித்தார். இந்த விமானங்கள் அகமதாபாத், சூரத், ஜாம்நகர், பாவ்நகர் மற்றும் காண்ட்லாவை ஒன்பது இருக்கைகள் கொண்ட செஸ்னா கிராண்ட் கேரவன் விமானத்தைப் பயன்படுத்தி இணைத்தன. [10] இந்த சேவை 2013ல் நிறுத்தப்பட்டது. ஏப்ரல் 2017ல் உதான்(UDAN) திட்டத்தில், டெக்கான் சார்டர்,  34 இந்திய வழித்தட அனுமதிகளை பெற்றது. [11] ஏர் டெக்கான் என்ற பெயரில் இயங்கும் இது மும்பை மற்றும் நாசிக் இடையேயான விமானங்களுடன் 2017 டிசம்பரில் செயல்படத் தொடங்கும். ஏர் டெக்கான் குறுந்தொலைவு பயணங்களுக்கு ஏற்ற 19 இருக்கைகள் கொண்ட பீச்கிராஃப்ட்1900D டர்போபிராப்(Beechcraft 1900D Turboprop) வகை வானூர்திகளை இயக்கும். இந்த வான் சேவை நிறுவனம் டெல்லி, மும்பை, கல்கத்தா மற்றும் சில்லாங் ஆகிய மாநகரங்களுக்கு அருகில் உள்ள நகரங்களை இணைக்க திட்டமிட்டுள்ளது. [12]

விருதுகள் மற்றும் கவுரவங்கள்[தொகு]

பிரபலமான கலாச்சாரத்தில்[தொகு]

சூரரைப் போற்று என்று எடுக்கப்பட்ட தமிழ்ப் படம், கோ. ரா.கோபினாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

கோபிநாத் எழுதிய புத்தகங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Pathak, Nilima (8 April 2011). "Adopting a revolutionary approach". Gulf News. பார்க்கப்பட்ட நாள் 1 May 2012.
  2. "GR Gopinath: Latest News & Videos, Photos about GR Gopinath | The Economic Times". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
  3. The Unstoppable Indians: Capt. G R Gopinath, founder, Air Deccan (Aired: March 2009) (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2020-01-20
  4. Srikar Muthyala (29 September 2015). "The List of Great Entrepreneurs of India in 2015". MyBTechLife. Archived from the original on 2016-01-14.
  5. Bengaluru, Sudha Narasimhachar (1 May 2012). "Adored by millions, Capt Gopinath is a man of many faces". The Weekend Leader. பார்க்கப்பட்ட நாள் 1 May 2012.
  6. "Captain G R Gopinath: Founder of Air Deccan". Matpal.com. 8 February 2012. பார்க்கப்பட்ட நாள் 1 May 2012.
  7. ET Bureau 27 Mar 2009, 04.30am IST. "Captain Gopinath to fight LS elections - timesofindia-economictimes". Articles.economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2016-01-07.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  8. "Director Report Kingfisher Airlines Ltd". ET Markets.com. பார்க்கப்பட்ட நாள் 19 December 2017.
  9. "GR Gopinath's Deccan Charters faces severe crisis; puts entire fleet of aircraft on sale". தி எகனாமிக் டைம்ஸ். 15 December 2012. https://economictimes.indiatimes.com/industry/transportation/airlines-/-aviation/gr-gopinaths-deccan-charters-faces-severe-crisis-puts-entire-fleet-of-aircraft-on-sale/articleshow/17620998.cms. 
  10. "Deccan Shuttles to launch operations in Gujarat on Monday". Live Mint. 18 August 2012. http://www.livemint.com/Companies/HctiI7me9Xgp7Le5qCyfiM/Deccan-Shuttles-to-launch-operations-in-Gujarat-on-Monday.html. 
  11. "Captain Gopinath back in the game; Deccan Charter to fly on regional routes". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 27 March 2017. http://www.business-standard.com/article/companies/captain-gopinath-back-in-the-game-deccan-charter-to-fly-on-regional-routes-117032700106_1.html. 
  12. "Aviation pioneer GR Gopinath makes comeback with Air Deccan, to start disruptive Re 1 tickets". Business Today (India). 15 December 2017. http://www.businesstoday.in/sectors/aviation/gr-gopinath-air-deccan-re-1-tickets-low-cost-airlines-cheap-flights/story/266075.html. 
  13. Rolex awards for Enterprise பரணிடப்பட்டது 2010-09-21 at the வந்தவழி இயந்திரம்
  14. "The Hindu : Karnataka / Bangalore News : 127 persons get Rajyotsava Award". www.thehindu.com. Archived from the original on 2008-01-31. பார்க்கப்பட்ட நாள் 2015-11-17.
  15. "Captain Gopinath". Indian Heroes. பார்க்கப்பட்ட நாள் 1 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._ரா._கோபிநாத்&oldid=3551941" இலிருந்து மீள்விக்கப்பட்டது