கோட்பாட்டுவாத இயற்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கோட்பாட்டுவாத இயற்பியல் ஆனது கணித மாதிரிகள் மற்றும் கருத்தியல்களை பகுத்தறிவது, விளக்குவது மற்றும் இயற்கை நிகழ்வுகளை கணிப்பது போன்றவற்றுடன் சம்பந்தப்பட்ட இயற்பியலின் ஒரு பகுதியாகும். இது கருவிகள் மூலம் பரிசோதனை செய்து முடிவுகளை எடுக்கும் பரிசோதனை இயற்பியலுக்கு நேர் எதிர்மாறாக கருதப்படுகிறது.

அறிவியலின் முன்னேற்றம் பரிசோதனை இயற்பியலுக்கும் கோட்பாட்டுவாத இயற்பியலுக்கும் இடையேயான இரு திசை பயன் விளைவுகளில் தங்கியுள்ளது. சிலவேளைகளில் கோட்பாட்டுவாத இயற்பியல் சோதனை மற்றும் அவதானிப்புகளை குறைவாகவும் , கடினமான கணித முறைகளை அதிகளவிலும் பயன்படுத்துகின்றது. உதாரணமாக சிறப்புச் சார்புக் கோட்பாடு விருத்தி நிலையில் இருந்த போது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மேக்ஸ்வெல் சமன்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், லாரன்ஸ் நிலைமாற்றத்தையே அதிகம் கருத்தில் கொண்டார் .ஆனாலும் அவர் மைக்கல்சன்-மார்லே சோதனையில் ஆர்வம் காட்டவில்லை. அதே வேளை, முன்னர் வரை கோட்பாட்டு அடிப்படையில் விளக்கப்படாமல் இருந்த ஒளிமின் விளைவை விளக்கி கூறியதால் ஐன்ஸ்டைனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.