கொல்லம் பரப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொல்லம் பரப்பில் பொதுவாகக் கிடைக்கும் நெமிட்டெரைடீ மீன் வகை இறால் இனம்
கொல்லம் பரப்பில் உள்ள மீன்பிடித் துறைமுகமான சக்தி குளங்கரையில் பிடிபட்ட ஓர் ஆழ்கடல் இறால்

கொல்லம் பரப்பு (Kollam Parappu) இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள மீன்பிடித் தளங்களில் ஒன்றாகும். குயிலான் கரை என்று கொல்லம் பரப்பு பரவலாக அறியப்படுகிறது.[1][2] 08 'வடக்கு மற்றும் 09' வடக்கு அட்சரேகைக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் 275-375 மீட்டர் ஆழத்தில் உள்ள பகுதி கொல்லம் பரப்பு என வரையறுக்கப்பட்டுள்ளது.[3] கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் கடற்கரையில் 3,300 சதுரகிலோமீட்டர் பரப்பளவு பகுதி இப்பரப்பில் அடங்கியுள்ளது. ஆழ்கடல் இறால், கூனிறால் மற்றும் கல் இறால் உள்ளிட்ட வளமான கடல் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட வளமான மீன்பிடித் தளமாக கொல்லம் பரப்பு மீன்பிடித்தளம் கருதப்படுகிறது.[4] குயிலான் கரையில் 21 முதல் 26 பாகை செல்சியசு வரை நீரின் வெப்பநிலை மிதமானதாகவும் உப்புத்தன்மை ஆயிரத்திற்கு 34 முதல் 34.6 பாகங்கள் வரையிலும் காணப்படுகிறது.[5]

சூலை முதல் அக்டோபர் வரையிலான காலம் இந்த மீன்பிடி தளத்தின் உச்ச பருவம் ஆகும். நெமிட்டெரைடீ மீன் வகைகளும் பந்தலிடே இறால் வகைகளும் கிடைக்கின்ற முக்கியமான மீன்பிடித்தளமாக கொல்லம் பரப்பு சிறப்பு பெற்றுள்ளது. அறிவியல் ஆராய்ச்சி, கடல்சார் ஆய்வுகள், சூழலியல் ஆய்வுகள் போன்றவற்றை மேற்கொள்வதற்காக பல மீன்வள விஞ்ஞானிகளை இக்குயிலான் கரை ஈர்க்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Need To Protect The Fishing Hub Of Kollam Parappu (Quilon Bank)- Laid on 15 September, 2020". Indian Kanoon.
  2. "Fishers' Statewide protest on Oct. 15". The Hindu.
  3. "Finfish diversity in the trawl fisheries of southern Kerala" (PDF). eprints CMFRI.
  4. Chakraborty, Rekha Devi (October 2014). "Fishery and biology of Plesionika quasigrandis Chace, 1985 off Sakthikulangara, south-west coast of India". Indian Journal of Fisheries: 10. https://www.researchgate.net/publication/271845409_Fishery_and_biology_of_Plesionika_quasigrandis_Chace_1985_off_Sakthikulangara_south-west_coast_of_India. 
  5. "Proceedings of the Second Workshop on Scientific Results of FOR Sugar Sampada, 1996" (PDF). eprints CMFRI.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லம்_பரப்பு&oldid=3703689" இலிருந்து மீள்விக்கப்பட்டது