கொச்சி கடல்சார் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொச்சி கடல்சார் அருங்காட்சியகம் (Maritime Museum) என்பது இந்தியாவின் கொச்சியில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.

இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காட்சியகமானது கேரளத்தின் கப்பல் தொழில் பாரம்பரியம், ஆதிகாலதில் அரப்பா, மொகஞ்சதாரோ, அரேபியாவுடன் கேரளம் கொண்டிருந்த வணிகத் தொடர்பு ஆகியவற்றைக் காட்டுகிறது. மேலும் கேரளத்தின் கடல் வீரரான குஞ்சலி மரக்காயர் குறித்தும் தெரிவிக்கிறது.

இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பிரிவானது முற்காலத்தில் இந்தியா கப்பல் கட்டும் தொழிலில் அடைந்திருந்த சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. கிருத்துவுக்கு முன்பும், பின்பும் 12 ஆம் நூற்றாண்டிலும் இந்திய துணைக்கண்டத்தினர் கப்பல் கட்டுவதில் பெற்றிருந்த தேர்ச்சி போன்றவற்றை விளக்குகிறது.[1]

குறிப்புகள்[தொகு]