கே. டி. எம் அகமது இப்ராகிம் சாகிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கே. டி. எம் அகமது இப்ராகிம்
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினர்
பதவியில்
14 ஜூலை 1947 – 24 ஜனவரி 1950
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபேட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு
அரசியல் கட்சிஇந்திய முஸ்லிம் லீக்
உறவுகள் முகம்மது இஸ்மாயில் சாஹிப் (Brother)
முன்னாள் கல்லூரிசி. எம் கல்லூரி, இந்து கல்லூரி, திருவனந்தபுரம்

கே. டி. எம் அகமது இப்ராகிம் சாகிப் (K. T. M. Ahmed Ibrahim) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.[1][2][3][4] இவர் 1947 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி முதல் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி வரை இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தார். இவர் அகில இந்திய முஸ்லீம் லீக்கின் தலைவராகவும் பணியாற்றினார்.[1]

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

இப்ராஹிம் தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலியில் பேட்டை என்னுமிடத்தில் பிறந்தார். இவர் தமிழ், சமஸ்கிருதம், அரபு மற்றும் உருது மொழிகளில் அறிஞரான மறைந்த மௌலவி மியாகான் இராவுத்தரின் மகன் ஆவார். திருவனந்தபுரத்தில் உள்ள சி. எம் கல்லூரியிலும் இந்துக் கல்லூரியிலும் அகமது இப்ராகிம் படித்தார். இவர் 1919 ஆம் ஆண்டு தன் இளங்கலைப் பட்டத்தையும், 1921 ஆம் ஆண்டு சட்டத்துறையில் இளங்கலைப் பட்டத்தையும் படித்து முடித்தார்.[5][6]

இயக்கம்[தொகு]

இவர் மாணவராக இருந்தபோதே தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். இவர், தனது சகோதரர் எம். முகமது இஸ்மாயில் சாகிப், எம்எல்ஏவுடன் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். 1920 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற 26 ஆவது மாகாண அரசியல் மாநாட்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒத்துழையாமைக்குத் தீர்மானம் நிறைவேறக் காரணமானவர் ஆவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Wright, Theodore P. (September 1966). "The Muslim League in South India since Independence: A Study in Minority Group Political Strategies" (in en). American Political Science Review 60 (3): 579–599. doi:10.2307/1952972. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-0554. https://www.cambridge.org/core/journals/american-political-science-review/article/abs/muslim-league-in-south-india-since-independence-a-study-in-minority-group-political-strategies/2EBA3F25D373A0D9BA1DBAA6B9D25C30. 
  2. "Constitution of India". www.constitutionofindia.net. பார்க்கப்பட்ட நாள் 2023-01-26.
  3. "Eparlib". Constituent Assembly Debates. https://eparlib.nic.in/bitstream/123456789/762982/1/cad_28-08-1947.pdf. 
  4. "Freedom First Magazine | The monthly journal of the Indian Committee for Cultural Freedom". www.freedomfirst.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-26.
  5. "Constituent Assembly of India: Debates". loksabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-26.
  6. "Debates in the Constituent Assembly and thereafter on UniformCivil Code". Indian Policy Foundation. 13 November 2020. https://www.ipf.org.in/encyc/2020/11/13/2_02_30_42_Debates-in-the-Constituent-Assembly-and-thereafter-on-Uniform-Civil-Code-Papers_1.pdf.