கே. ஜி. அமரதாச

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. ஜி. அமரதாச தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் சிங்கள மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னின்று உழைத்த சிங்களத் தமிழ் அறிஞர் ஆவார்.

1957இல் இலக்கிய உலகிற்குப் பிரவேசித்த அமரதாச தேசிய இனப்பிரச்சனையின் கூர்மையை புரிந்து கொண்டவர். தேசிய ஒருமைப்பாடு ஒருவழிப் பாதையல்ல எனக்கருதினார். பல தமிழ் இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்து சிங்களப் பத்திரிகைகளின் மூலம் சிங்கள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இலங்கைக் கலாச்சார அமைச்சில் பணிபுரிந்தார்.

பாரதி நூற்றாண்டை முன்னிட்டு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட பாரதி பத்ய என்னும் நூலில் மகாகவி பாரதியாரின் கவிதைகள் பல அமரதாசவின் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றன. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி, எங்கள் நாடு, சுதந்திரதேவியின் துதி, புதிய ருஷ்யா, விடுதலை போன்ற பல பாடல்களை அவர் மொழிபெயர்த்திருந்தார்.

எஸ். எம். ஹனிபா எழுதிய மகாகவி பாரதி நூலைச் சிங்களத்தில் மொழிபெயர்த்தார். கண்டி-கல்ஹின்னை தமிழ் மன்றம் இதனை வெளியிட்டது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஜி._அமரதாச&oldid=2146285" இலிருந்து மீள்விக்கப்பட்டது