கேவல் கிரிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேவல் கிரிசன் (Kewal Krishan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1923 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் பஞ்சாபில் ஒரு மருத்துவ பயிற்சியாளராகவும் ஓர் அரசியல்வாதியாகவும் இயங்கினார். 2002 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை பஞ்சாப் சட்டப் பேரவையின் சபாநாயகராக இருந்தார்.

முதன்முதலில் 1969 ஆம் ஆண்டில் பஞ்சாப் சட்டமன்றத்தின் இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 1973 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையும் மீண்டும் 2002 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையும் சபாநாயகராக பணியாற்றினார். 1980 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை பஞ்சாப் அரசில் நிதி அமைச்சராகப் பணியாற்றினார் [1]

2005 ஆம் ஆண்டில், பாக்கித்தானில் உள்ள பஞ்சாப் சட்டமன்றத்திற்கு நல்லெண்ணப் பயணத்திற்காக சட்டமன்றக் குழுவை வழிநடத்தினார். [2]

2006 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தனக்கு 83 வயதாகிவிட்டது. அரசியலில் 90 வயது வரை தொடர விரும்பவில்லை. இப்போது இளைய தலைமுறையினர் ஆட்சியைப் பிடிக்கும் நேரம் வந்துவிட்டது என்ற காரணத்தை கூறினார். [3] கேவல் கிரிசன் 2008 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 ஆம் தேதியன்று மாரடைப்பால் இறந்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Biographic details on Punjab Assembly website பரணிடப்பட்டது 29 திசம்பர் 2006 at the வந்தவழி இயந்திரம் retrieved 28 June 2006
  2. Reported in Daily Times, Pakistan, 22 May 2005 retrieved 28 June 2006
  3. Reported in The Tribune, India, 21 January 2006, retrieved 28 June 2006
  4. Kewal Krishan's obituary பரணிடப்பட்டது 2009-01-08 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேவல்_கிரிசன்&oldid=3829119" இலிருந்து மீள்விக்கப்பட்டது