கேரட் சில்லு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரட் சில்லு
Carrot Chips
கேரட் சில்லு
வகைநீரகற்றப்பட்ட உணவு, பொறித்த உணவு
பரிமாறப்படும் வெப்பநிலைசிற்றுண்டி
முக்கிய சேர்பொருட்கள்கேரட், எண்ணெய் (பொறிப்பதற்கு)

 

கேரட் சில்லு (Carrot chip) என்பது வறுத்த அல்லது உலர்த்தப்பட்ட கேரட் துண்டுகளாகும்.[1] சில கேரட் உற்பத்தியாளர்கள் பொதிச் செய்யப்பட்ட, வெட்டப்பட்ட கேரட்டை கேரட் சில்லு என்றும் குறிப்பிடுகின்றனர். கேரட் சில்லுகளின் வறுத்த உணவானது பெரும்பாலும் கேரட் பொறித்தது என்று குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக கேரட் சில்லுகள் பிரஞ்சு பொரியல் வடிவத்தில் தயாரிக்கப்படும் போது. வறுத்த கேரட் சில்லுகளில் 35-40% எண்ணெய் உள்ளடக்கம் உள்ளது.[1]

கேரட் சில்லுகள் உருளைக்கிழங்கு சில்லுகளுக்கு ஆரோக்கியமான மாற்றாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் இரண்டு பொருட்களும் ஒரே மாதிரியான நிலைத்தன்மையையும் பயன்பாடுகளையும் கொண்டுள்ளன.[2]

கேரட் சில்லுகள், சில வளரும் நாடுகளில் மிகவும் முக்கியமான உணவாக இருக்கின்றது. நெப்ராஸ்கா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அகமது சுலைமான் மற்றும் சூடி டிரிசுகெல் ஆகியோர் கேரட் சில்லு உணவு தயாரிப்பில் பணியாற்றி வருகின்றனர். ஏனெனில் ஏழ்மையான சூழ்நிலையில் வளரும் குழந்தைகளில் உயிர்ச்சத்து குறைபாடுகளை எதிர்த்துப் போராட கேரட் சில்லு உதவும் என்று நம்புகிறார்கள்.[3]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Salunkhe, D.K.; Kadam, S.S. (1998). Handbook of Vegetable Science and Technology: Production, Composition, Storage, and Processing. Food Science and Technology. Taylor & Francis. p. 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8247-0105-5.
  2. DOUGLAS MCGRAY (2011-03-22). "How carrots became the new junk food". Fast Company. பார்க்கப்பட்ட நாள் 11 October 2013.
  3. Diane Goettel (5 October 2013). "What are Carrot Chips?". wiseGEEK. பார்க்கப்பட்ட நாள் 11 October 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரட்_சில்லு&oldid=3773413" இலிருந்து மீள்விக்கப்பட்டது