கெம்பராஜ் அர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெம்பராஜ் அர்ஸ்
பிறப்புதே. கெம்பராஜ் அர்ஸ்
(1917-02-05)5 பெப்ரவரி 1917 [1]
கல்லள்ளி, அன்சூரு வட்டம், மைசூர் மாநிலம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய கருநாடகம், இந்தியா)
இறப்பு18 மே 1982(1982-05-18) (அகவை 65)
தேசியம்இந்தியர்
பணி
  • நடிகர்
  • தயாரிப்பாளர்
  • இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1942–1964
வாழ்க்கைத்
துணை
டி. என். லலிதா
பிள்ளைகள்3

தே. கெம்ராஜ் அர்ஸ் (5 பிப்ரவரி 1917 - 18 மே 1982) என்பவர் ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், நடிகர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக கன்னடத் திரைப்படத்துறையில் பணியாற்றினார். [2] 1940கள் மற்றும் 1950களில் இவரது திரைப்படங்கள் பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. ராஜ்குமார் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே, அர்ஸ் நன்கு பிரபலமான நட்சத்திரமாக இருந்தார். இவரது அண்ணன் டி. தேவராஜ் அர்ஸ், கர்நாடக முதல்வராக பணியாற்றினார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கெம்பராஜ் அர்ஸ், மைசூரில் உள்ள உன்சூர் வட்டத்தில் உள்ள கல்லள்ளி என்ற சிற்றூரில் தேவராஜ் அர்ஸ், தேவீரம்மணி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரது அண்ணன் டி. தேவராஜ் அர்ஸ். கெம்பராஜ் ஆங்கில இலக்கியம் படித்தவர். இவர் தனது வகுப்புத் தோழியான லலிதாவை மணந்து மூன்று மகள்களைப் பெற்றார். அர்ஸ் மருத்துவராக ஆசைப்பட்டார், ஆனால் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். [3]

தொழில்[தொகு]

அர்ஸ் கன்னட நாடகக் கலைஞரான குப்பி வீரண்ணாவைச் சந்தித்து, குப்பி நிறுவனத்தின் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1942 இல், ஒரு சுயாதீன தயாரிப்பாளராக, குப்பி வீரண்ணா தனது முதல் திரைப்படமான ஜீவன நாடகத்தை தனது சொந்த பதாகையான குப்பி பிலிம்ஸ் மூலம் தயாரித்தார். அப்படத்தில் சாந்தா ஊப்ளிகர், எம். வி. ராஜம்மா ஆகியோரை ஜோடியாக கொண்டு கெம்பராஜ் அர்ஸ் கதாநாயகனாக நடித்தார். [4] பின்னர் 1947-ல் கிருஷ்ணலீலா படத்தில் கம்சனாக நடித்தார். 1951 ஆம் ஆண்டு ராஜ விக்கிரமா ஒரே திரையரங்கில் 25 வாரங்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. [5] இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். உர்ஸ் "கருநாடக திரைப்பட மேம்பாட்டு வாரியத்தின்" தலைவராகவும் இருந்துள்ளார்.

சுயசரிதை[தொகு]

கெம்பராஜ் அர்ஸ் 1979 இல் வெளியிடப்பட்ட "அருவத்து வருசகலு" (அறுபது ஆண்டுகள்) என்ற சுயசரிதையை எழுதினார். [6]

இறப்பு[தொகு]

கெம்பராஜ் அர்ஸ் 18 மே 1982 இல் இறந்தார், இவருக்கு மனைவி மற்றும் மகள்கள் இருந்தனர்.

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு தலைப்பு பணி மொழி பாத்திரம் குறிப்புகள்
இயக்குநர் தயாரிப்பாளர் நடிகர்
1942 ஜீவன நாடகா Red XN Red XN Green tickY கன்னடம் மோகன் அறிமுகப் படம்
1947 மகாநந்தா Red XN Red XN Green tickY கன்னடம்
1947 கிருஷ்ணலீலா Red XN Red XN Green tickY கன்னடம் கம்சன்
1948 பக்த ராமதாஸ் Green tickY Red XN Green tickY கன்னடம் பாத் ஷா
1950 சிவா பார்வதி Red XN Red XN Green tickY கன்னடம்
1950 ராஜ விக்கிரமா Green tickY Green tickY Green tickY கன்னடம்
தமிழ்
விக்ரமா
1953 ஸ்ரீகிருஷ்ணா Red XN Red XN Green tickY கன்னடம்
1954 கற்கோட்டை Green tickY Green tickY Green tickY தமிழ்
1954 ஜலதுர்கா Green tickY Green tickY Green tickY கன்னடம்
1957 நள தமயந்தி Green tickY Green tickY Green tickY கன்னடம்
தமிழ்
1959 அழகர்மலை கள்வன் Green tickY Green tickY Red XN தமிழ்
1964 நவ ஜீவனா Red XN Red XN Green tickY கன்னடம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Celebrity Kemparaj Urs". chiloka.com.
  2. "Kemparaj Urs birth anniversary". Digital Kannada.com. 3 Feb 2017.
  3. "Glorious body of work". 8 Feb 2017.
  4. "History 15 - Jeevana Nataka - Gubbi Veeranna Independent Producer". 13 August 2013.
  5. "Kannada film actor Kemparaj Urs". 1 Aug 2019.
  6. "Autobiography of Kemparaj Urs".

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கெம்பராஜ் அர்ஸ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெம்பராஜ்_அர்ஸ்&oldid=3837852" இலிருந்து மீள்விக்கப்பட்டது