குளோராக்சிபைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோராக்சிபைட்டு
Chloroxiphite
மெண்டிபைட்டில் பதிக்கப்பட்ட குளோராக்சிபைட்டு படிகம் (அடர் பச்சை). பிரகாசமான நீலத்தில் டையாபோலியைட்டு
பொதுவானாவை
வகைஆலைடு கனிமம்
வேதி வாய்பாடுPb3CuO2Cl2(OH)2
இனங்காணல்
நிறம்மங்கலான ஆலிவ் பச்சை முதல் பிசுதா பச்சை நிறம் வரை
படிக இயல்புநீளமும், தட்டையும், அடுக்குமான பெரும்பாலும் வளைந்த படிகங்கள் மற்றும் குழுக்கள்
படிக அமைப்புஒற்றைச் சாய்வு
பிளப்பு{101} இல் தெளிவு, {100} இல் தனித்துவம்
விகுவுத் தன்மைநொறுங்கும், அரைபடும்
மோவின் அளவுகோல் வலிமை2 12
மிளிர்வுவிடாப்பிடியானது, பிசின்
கீற்றுவண்ணம்இளம் பச்சை மஞ்சள்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி6.76 - 6.93
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 2.160 nβ = 2.240 nγ = 2.250
இரட்டை ஒளிவிலகல்δ = 0.090
பலதிசை வண்ணப்படிகமைபார்வை: Y = மஞ்சள் பழுப்பு; Z = பிரகாசமாஅன மாணிக்கப் பச்சை
2V கோணம்அளக்கப்பட்டது: ~70°
மேற்கோள்கள்[1][2][3][4]

குளோராக்சிபைட்டு (Chloroxiphite) என்பது Pb3CuO2Cl2(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரிய ஆலிவ் பச்சை நிறம் முதல் பிசுதா பச்சை நிறம் வரை நிறங்கொண்ட காரீயம் தாமிரம் ஆலைடு கனிமம் என்று இது வகைப் படுத்தப்படுகிறது. இக்கனிமம் முதன்முதலில் 1923 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சோமர்செட், மெண்டிப் மலையில் மெண்டிபைட்டு என்ற கனிமத்துடன் சேர்ந்து காணப்படுகிறது. மெண்டிபைட்டு [2] கனிமத்தைப் போலவே இதுவும் ஓர் ஆக்சிகுளோரைடு வகை கனிமமாகும். காரீயத்தின் தாதுவான கலீனா இரண்டாம் நிலை ஆக்சிசனேற்றம் அடைந்து குளோராக்சிபைட்டு உருவாகிறது. டையாபோலியைட்டு, பார்க்கின்சோனைட்டு, உல்பெனைட்டு, செருசைட்டு, ஐதரோசெருசைட்டு [4] போன்ற கனிமங்களும் இக்கனிமமும் சேர்ந்து காணப்படுகின்றது.பச்சை என்ற பொருள் கொண்ட கிரேக்க மொழிச் சொல்லிலிருந்தும் மெல்லிய தகடு என்ற படிக வடிவத்தை அடிப்படையாக்க் கொண்டும் குளோராக்சிபைட்டு என்ற பெயர் வருவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோராக்சிபைட்டு&oldid=2974105" இலிருந்து மீள்விக்கப்பட்டது