குச்சி கும்பிடுபூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காப்லோகோரிபா மேக்ரா, ஆப்பிரிக்க குச்சி மாண்டிஸ் இனம். எம். பீயர், 1935 இல் உருவப்படம்

குச்சி கும்பிடுபூச்சி (Stick mantis) என்பது குச்சிகள் அல்லது கிளைகள் போன்ற உருமறைப்பாகப் பிரதிபலிக்கும் பல வகையான கும்பிடுபூச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் பொதுவான பெயராகும். பெரும்பாலும் இப்பெயர் முழு பேரினத்தினையும் அடையாளம் காண உதவுகிறது:[1][2][3][4]

  • புரூனேரியா (புருன்னர் குச்சி கும்பிடுபூச்சி, பிரேசில் குச்சி கும்பிடுபூச்சி மற்றும் சிறிய இறக்கை குச்சி கும்பிடுப்பூச்சி)
  • கேப்லோகோரிபா (ஆப்பிரிக்கக் குச்சி கும்பிடுபூச்சி)
  • பாராடோக்சோடெரா ( போர்னியோ குச்சி கும்பிடுபூச்சி மற்றும் இராட்சத மலேசிய குச்சி கும்பிடுப்பூச்சி)
  • போபா (ஆப்பிரிக்கக் குச்சி கும்பிடுபூச்சி) [5]

சில சமயங்களில், ஒரு பேரினத்தின் அனைத்து உறுப்பினர்களும் அல்லாத சில சிற்றினங்களில் ஒன்றின் மாறுபாட்டால் அழைக்கப்படுகின்றன.

  • அர்சிமேண்டிசு லேட்சுடைலா (ஆத்திரேலிய குச்சி கும்பிடுபூச்சி) [6]
  • சூடோவேட்சு பெருவியானா (பெருவிய குச்சி கும்பிடுபூச்சி) [7]

ஒத்த பூச்சிகள்[தொகு]

ஆர்கோசார்க்கசு ஹார்ரிடஸ் என்ற குச்சிப் பூச்சியானது பாஸ்மாடோடியாவைச் சேர்ந்தது. படம்: ஜார்ஜ் வெர்னான், ஹட்சன் 1892

குச்சிப் கும்பிடுபூச்சிகளை குச்சிப்பூச்சிகளுடன் (பாசுமாடோடியா) குழப்பிக் கொள்ளக் கூடாது. இருப்பினும் பிந்தியவர்கள் நீண்ட காலமாக அனைத்து கும்பிடுபூச்சிகளுடன் நெருங்கிய உறவினர்களாகக் கருதப்பட்டன. இது இப்போது பெரும்பாலும் பலசிற்றினங்கள் கொண்டதாகவும் மற்றும் காலாவதியானதாகவும் கருதப்படுகிறது. அதேபோல், கும்பிடுப்பூச்சி மற்றும் குச்சி பூச்சிகள் இரண்டும் சமீபத்தில் கண்டறியப்பட்ட மாண்டோபாசுமாடோடியாவிலிருந்து தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குச்சி_கும்பிடுபூச்சி&oldid=3756086" இலிருந்து மீள்விக்கப்பட்டது