குகொ சவெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குகொ சவெஸ்

குகொ ரஃபயெல் சவெஸ் ஃபிரியாஸ் (Hugo Rafael Chavez Frias) (பிறப்பு ஜூலை 28, 1954) வெனீசூலாவின் தற்போதைய மற்றும் 53வது சனாதிபதி ஆவார். தென் அமெரிக்காவின் முதற் குடிமக்கள் பின்புலம் உள்ள முதல் சனாதிபதி இவர் ஆவார். இவர் ஒரு தீவர இடது சாரி தலைவர் ஆவார். இவரது தத்துவ பின்புலத்தில், தலைமையில் வெனிஸ்வேலாவில் அமைந்த புரட்சியை பொலிவரியன் புரட்சி என்று குறிப்பிடுவர். பொலிவேரியப் புரட்சியின் தலைவராக இவர் மக்களாட்சி சோசியலிசம் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வல்லதிகார எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளின் தனது சொந்த பார்வையை பரப்பி வருகிறார். இவர் இன்னாளின் முதலாளித்துவத்தையும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வெளியுறவுக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்து வருகிறார்.

கூபாவில் தற்போது மருத்துவ சிகிட்சை பெற்றுவரும் சவேஸ் கடந்த மாதம் தனக்கு புற்றுநோய் கட்டி ஒன்று அகற்றப்பட்டது என்று தெரிவித்தது அந்த நாட்டு மக்களிடையே துயர உணர்வை கிளப்பியதாக வெனிசூலா நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.[1]

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=குகொ_சவெஸ்&oldid=1090316" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்