கிழக்கு காரோ மலை மாவட்டம்

ஆள்கூறுகள்: 25°29′44″N 90°37′01″E / 25.49546°N 90.61682°E / 25.49546; 90.61682
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிழக்கு காரோ மலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிழக்கு காரோ மலை மாவட்டம் மாவட்டம்
கிழக்கு காரோ
கிழக்கு காரோ மலை மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா
மாநிலம்மேகாலயா, இந்தியா
தலைமையகம்வில்லியம் நகர்
பரப்பு2,603 km2 (1,005 sq mi)
மக்கட்தொகை247,555 (2001)
படிப்பறிவு53%
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை7
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கிழக்கு காரோ மலை மாவட்டம், மேகாலயாவில் உள்ளது. காரோ மலை மாவட்டத்தைப் பிரித்து இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் வில்லியம் நகரில் உள்ளது. மேகாலயாவின் முன்னாள் முதல்வரின் நினைவாக ”வில்லியம்சன் ஏ. சங்மா” எனப் பெயரிட்டனர்.இந்த மாவட்டம், 2603 சதுர கிலோமீட்டருக்கு பரவியுள்ளது.

பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தில் இருந்து துரா மக்களவைத் தொகுதியின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார். அண்மையில் பூர்ணோ அகிதோக் சங்மா தேர்வானார். இந்து ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  • தம்போ ரோங்ஜெங் - ரோங்ஜெங்
  • கார்குட்டா - கார்குட்டா
  • ரேசுபேல்பாரா - பேசுபேல்பாரா
  • சமந்தா - சமந்தா
  • சோங்சக் - சோங்சக்

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 317,618 மக்கள் வாழ்ந்தனர். சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 122 பேர் வாழ்கின்றனர். பால் விகிதத்தில் 1000 ஆண்களுக்கு 968 பெண்கள் உள்ளனர். இங்கு வாழ்வோரில் 75.51% பேர் கல்வி கற்றுள்ளனர்.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]