கிருஷ்ணாநகர் மகளிர் கல்லூரி

ஆள்கூறுகள்: 23°24′35″N 88°28′39″E / 23.4097349°N 88.4774427°E / 23.4097349; 88.4774427
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணாநகர் மகளிர் கல்லூரி
வகைஇளங்கலைக்கான மகளிர் கல்லூரி
உருவாக்கம்1958; 66 ஆண்டுகளுக்கு முன்னர் (1958)
சார்புகல்யாணி பல்கலைக்கழகம்
தலைவர்சிறி சித்தார்த்தா மஜூம்தார்
முதல்வர்டாக்டர் நடாஷா தாஸ்குப்தா
அமைவிடம்
அரவிந்தோ சரணி
, , ,
741101
,
23°24′35″N 88°28′39″E / 23.4097349°N 88.4774427°E / 23.4097349; 88.4774427
வளாகம்ஊரகம்
இணையதளம்Krishnagar Women's College
கிருஷ்ணாநகர் மகளிர் கல்லூரி is located in மேற்கு வங்காளம்
கிருஷ்ணாநகர் மகளிர் கல்லூரி
Location in மேற்கு வங்காளம்
கிருஷ்ணாநகர் மகளிர் கல்லூரி is located in இந்தியா
கிருஷ்ணாநகர் மகளிர் கல்லூரி
கிருஷ்ணாநகர் மகளிர் கல்லூரி (இந்தியா)

கிருஷ்ணாநகர் மகளிர் கல்லூரி, என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் 1958 [1] ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மகளிர் கல்லூரி ஆகும். கலை மற்றும் அறிவியலில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி கல்யாணி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது[2] முதல் வெளிப்படையான திருநங்கை கல்லூரி முதல்வரான மனாபி பந்தோபாத்யாய், என்பவர் 2015 ஆம் ஆண்டில் கிருஷ்ணகர் மகளிர் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.[3]


கிருஷ்ணாநகரின் மையத்தில் 3.9 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த அழகான பசுமை வளாகம், மருத்துவ தாவர தோட்டம் மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், நன்கு சேமிக்கப்பட்ட தானியங்கி நூலகம், மின் இதழ்கள் மற்றும் OPAC வசதியுடன், அனைத்து உபகரணங்களுடன் கூடிய அறிவியல் ஆய்வகங்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்ப கருவிகளுடன் கூடிய வகுப்புகள், கணினி ஆய்வகம், சுகாதாரமான உணவை வழங்கும் மலிவான உணவகம், பாதுகாப்பான மற்றும் தூய குடிநீர், மிதிவண்டி நிறுத்துமிடம், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை, மாணவர்களுக்கான சுத்தமான விடுதி, விசாலமான விளையாட்டு மைதானம் மற்றும் கவர்ச்சிகரமான விளையாட்டு வசதிகள் போன்ற கல்வி கற்கத்தேவையான அனைத்து வசதிகளுடன் இக்கல்லூரி இயங்கி வருகிறது.[4]


துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • வேதியியல்
  • இயற்பியல்
  • கணிதம்

கலை.[தொகு]

  • பெங்காலி
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • வரலாறு.
  • புவியியல்
  • அரசியல் அறிவியல்
  • தத்துவம்
  • பொருளாதாரம்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதலில் கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இக்கல்லூரி, 2000 ஆம் ஆண்டில் கல்யாணி பல்கலைக்கழகத்தின் கீழ் வந்தது. தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) முதல் சுழற்சியில் B++ தரத்துடனும், அதன் இரண்டாவது சுழற்சியில் 2016 ஆம் ஆண்டில் B+ தரத்துடனும் அங்கீகாரம் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Colleges in West Bengal, University Grants Commission பரணிடப்பட்டது 16 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
  2. "Affiliated College of University of Kalyani". Archived from the original on 1 March 2012.
  3. "India's first transgender college principal starts work". WebIndia123. 9 June 2015 இம் மூலத்தில் இருந்து 5 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180805203212/https://news.webindia123.com/news/Articles/India/20150609/2613362.html. பார்த்த நாள்: 18 October 2018. 
  4. "எங்களைப் பற்றி-எமது வரலாறு".