கிரீம் ஸ்வான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரீம் ஸ்வான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரீம் பீட்டர் ஸ்வான்
பட்டப்பெயர்சைன்
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குபந்து வீச்சு சாளர்
உறவினர்கள்Raymond Swann (father), Alec Swann (brother)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 641)திசம்பர் 11 2008 எ. இந்தியா
கடைசித் தேர்வுசனவரி 7 2011 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 157)சனவரி 23 2000 எ. தென்னாபிரிக்கா
கடைசி ஒநாபபிப்ரவரி 22 2011 எ. நெதர்லாந்து
ஒநாப சட்டை எண்66 (previously 24)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 29 45 207 232
ஓட்டங்கள் 741 299 6,890 2,949
மட்டையாட்ட சராசரி 24.70 12.45 26.60 18.90
100கள்/50கள் –/4 –/– 4/35 –/14
அதியுயர் ஓட்டம் 85 34 183 83
வீசிய பந்துகள் 7,431 2,022 37,077 9,252
வீழ்த்தல்கள் 128 62 577 262
பந்துவீச்சு சராசரி 28.10 24.40 31.94 25.94
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
10 1 25 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 4
சிறந்த பந்துவீச்சு 6/65 5/28 7/33 5/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
25/– 19/– 155/– 78/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 22 2011

கிரேம் பீட்டர் ஸ்வான் (Graeme Peter Swann பிறப்பு: மார்ச் 24, 1979) ஒரு முன்னாள் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.[1] இவர் இங்கிலாந்துத் தேசியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார்.இவர் நார்த்தாம்டனில் பிறந்தார்.

ஸ்வான் 2000 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார்.ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்தின் இலங்கை சுற்றுப்பயணத்தில் அணியின் இரண்டாவது சுழல் பந்து வீச்சாளராக, மோன்டி பனேசருடன் சேர்ந்து தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இங்கிலாந்தின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் ஒரு நிரந்த இடத்தை பெற்றார். 2009 ஆஷஸில் வென்ற இங்கிலாந்து அணியில் இவர் விளையாடினர்.2009 ஆம் ஆண்டில் விரைவாக 50 இழப்புகளை எடுத்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனை படைத்தார்.தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்டத் தொடருக்குப் பின்னர் ஐசிசி பாந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இவர் மூன்றாம் இடத்திற்கு முன்னேறினார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஸ்வான் சாரா என்பவரை 29 சனவரி 2010 அன்று மணந்தார். இவர்கள் நாட்டிங்காமில் தங்கள் மூன்று குழந்தைகளான வில்பிரட் (பிறப்பு 17 பிப்ரவரி 2011), சார்லோட் (பிறப்பு 18 அக்டோபர் 2012) மற்றும் ஜெசிகா (பிறப்பு 2016) ஆகியோருடன் வாழ்கின்றனர். இவர் கால்பந்திலும் ஆர்வம் கொண்டவர், இவர் நியூகேஸில் யுனைடெட் மற்றும் பிளைத் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகளை ஆதரிப்பதாக பிபிசியின் கால்பந்து ஃபோகஸில் வெளிப்படுத்தினார்.

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

நார்தாம்ப்டன்ஷையருக்காக ஸ்வானுடன் இணைந்து விளையாடிய மோன்டி பனேசர் சிறப்பான திறனை வெளிப்படுத்தாத காரணத்தினால் இவர் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் தேர்வாகவில்லை. அவருக்குப் பதிலாக இவர் டிசம்பர் 2008 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஸ்வான் அறிமுகமானார்.தனது முதல் நிறைவின் மூன்றாவது பந்துவீச்சில் கவுதம் கம்பீரையும் ஆறாவது பந்துவீச்சில் ராகுல் திராவிட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் ரிச்சர்ட் ஜான்சனுக்குப் பிறகு (இங்கிலாந்திற்கும்) தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் நிறைவில் இரண்டு இழப்புகளைக் கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் தேர்வானார். இந்த போட்டியில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தனது முதல் ஐந்து இழப்புகளை வீழ்த்தினார். அந்தப் போட்டியில் 57 ஓட்டக்களை விட்டுக் கொடுத்து 5 இழப்புகளை வீழ்த்தினார். முதல் ஆட்டப் பகுதியில் இரண்டு பந்துகளில் இரண்டு இழப்புகளை எடுத்தார். ஆன்டிகுவாவில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் நிகழ்த்திய இரண்டாவது சிறந்த செயல்திறன் இதுவாகும். நான்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் ஐந்து இழப்புகளை ஸ்வான் எடுத்தார்.

பின் மட்டையாட்டத்தில் 9 ஆவது வீரராகக் களம் இறங்கிய இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 63* ஓட்டங்களையும் எடுத்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் நடந்த போட்டியில் இவர் மீண்டும் ஆறு இழப்புகளைக் கைப்பற்றினார். [3] இதில் முதல் ஆட்டப் பகுதியில் டெவன் ஸ்மித், ஷிவ்நாரைன் சந்தர்பால் மற்றும் பிரெண்டன் நாஷ் ஆகியோரினை ஆட்டமிழக்கச் செய்தார்.

சான்றுகள்[தொகு]

  1. BT Sport (30 November 2017), Cricket Masterclass: Slip catching | The Ashes on BT Sport, பார்க்கப்பட்ட நாள் 1 December 2017
  2. "Five-wicket haul crowns Graeme Swann's 'dream' year". BBC Sport. 30 December 2009. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/england/8434644.stm. பார்த்த நாள்: 16 August 2010. 
  3. "1st Test: England v West Indies at Lord's, May 6–8, 2009 | ESPN Cricinfo". ESPNcricinfo. http://content.cricinfo.com/engvwi2009/engine/match/380712.html. பார்த்த நாள்: 9 August 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரீம்_ஸ்வான்&oldid=3006951" இலிருந்து மீள்விக்கப்பட்டது