கியூரியோசிட்டி தரையுளவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இக் கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. அருள் கூர்ந்து, நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக் கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். மேற்கோள்கள் தரப்படாத கட்டுரைப் பகுதிகள் கேள்விக்கு உட்படலாம் என்பதுடன் நீக்கப்படவும் கூடும். |
கியூரியோசிட்டி தரையுளவி |
|
| இயக்குபவர் | நாசா |
|---|---|
| முதன்மை ஒப்பந்தக்காரர் |
|
| திட்ட வகை | தரையுளவித் திட்டம் |
| ஏவப்பட்ட நாள் | நவம்பர் 26, 2011 15:02:00.211 UTC (10:02 EST) |
| ஏவுகலம் | அட்லஸ் V |
| ஏவு தளம் | கேப் கனாவரலில் |
| திட்டக் காலம் | 668 செவ்வாய் மாதங்கள் |
| தே.வி.அ.த.மை எண் | 2011-070A |
| இணைய பக்கம் | Mars Science Laboratory |
| நிறை | 900 kg (வார்ப்புரு:Convert/பவு.) |
| திறன் | வெப்பக் கதிரியக்க மின்னியற்றி |
| செவ்வாய் landing | |
| Date | August 6, 2012, 05:17 UTC |
| Coordinates | அய்லிஸ் பல்லஸ் |
செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடத்திட்டத்தில் ஒரு பகுதியாக ஐக்கிய அமெரிக்காவின் நாசா நிறுவனத்தால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ஒரு தரையுளவியே கியூரியோசிட்டி (Curiosity rover) ஆகும். இது ஒரு கார் அளவானது. 2011 நவம்பர் 26இல் கேப் கனாவரலில் இருந்து ஏவப்பட்ட MSL ஏவுகணை மூலம் இது செவ்வாய்க்கு அனுப்பப்பட்டது. இது ஆகஸ்து 06ஆம் திகதி 2012இல் வெற்றிகரமாகச் செவ்வாயை வந்தடைந்தது. இது செவ்வாயை அடையும்முன் 563,000,000 கி.மீ. பயணித்துள்ளது. கியூரியோசிட்டி தரையுளவியின் முக்கிய பணிகளாக பின்வருவன உள்ளன:
- செவ்வாயின் புவியியலை ஆராய்தல்.
- செவ்வாயின் காலநிலையை ஆராய்தல்.
- செவ்வாய் உயிர்வாழ்வுக்கு எற்ற கிரகமா என ஆராய்தல்.