கார்ஸ்ட் அரிப்புச்சக்கரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சுண்ணாம்புப் பிரதேசங்களில் சிவிஜிக் என்பவர் கார்ஸ்ட் அரிப்புச் சக்கரம் காணப்படுவதை கண்டறிந்தார். இளம்நிலை, முதிர்நிலை, பின்முதிர்நிலை, முதுமைநிலை ஆகிய நான்கு நிலைகளில் அரிப்புச்சக்கரம் காணப்படுகிறது.

சுண்ணாம்புக் கரடு அரிப்புச் சக்கரம் - அமைப்பு

  • சுண்ணாம்புப்பாறை தடித்தும், சுத்தமானதாகவும் பெரிய பரப்பும் அமைந்தாலும்
  • சுண்ணாம்புப்பாறை அடுக்கு நிலநீர் மட்டத்திலிருந்து நன்றாக உயர்ந்தும் அமைந்திருந்தாலும்
  • சுண்ணாம்புப்பாறைக்கு கீழ் நீர்புகா பாறை இருந்தாலும்
  • சுண்ணாம்புப்பாறைக்க மேல் தரையின் பரப்பில் நீர்புகாபாறை இருந்தாலும்

சுண்ணாம்புப்பாறைகளின் பரப்பில் ஆறுகள் தம் அரிப்புச் செயரை நிகழ்த்துவதால் அரிப்புச்சக்கரம் தோன்றுகிறது. மேலும் சுண்ணாம்புப் பாறையின் மேலுள்ள நீர்புகாபாறை அடுக்கு ஆறுகளால் அரிக்கப்பட்டு அகற்றப்பட்டால் கார்ஸ்ட் அரிப்புச் சக்கரம் தோன்றும்.

கார்ஸ்ட் அரிப்புச் சக்கரம் - வகைப்பாடு[தொகு]

இளம்நிலை சுண்ணாம்புப்பாறைக்கு மேலடுக்குக்கு நீர்புகா பாறை அடுக்கு ஆறுகளால் அரிக்கப்பட்டு அகற்றப்படுகிறது. இத்தகைய கரைதல் மூலம் உறிஞ்சு துறைகள் ஏற்படுகின்றன. விரிசல்கள் வெடிப்புகள் ஆகியவை அகலப்படுத்தப்பட்டு அதன் வழியே நீர் கீழ்நோக்கி செல்கிறது. இதன் விளைவாகத் தோன்றுவது லப்பீக்கள், டொலினாக்கள் என்றும் வடிகால் அமைக்கப்படும். அடிநிலப் பாதைகள் அரிக்கப்பட்டுக் கரைக்கப்பட்டதால் சுண்ணாம்புப் பாறையில் நீர் மூன்று திசைகளில் (மேல் கீழ் பக்கவாட்டில்) பாய்கிறது.

முதிர்நிலை[தொகு]

அடிநில வடிகாலில் நீர் புகுந்து வெளியேறும் போது நீரானது உறிஞ்சு துறைகளில் புகுந்து மறையும் நிலைகளில் விழுங்கு துளைகள், முரட்டுப் பள்ளத்தாக்குகள் ஆகியவை மிகுந்து கார்ஸ்ட் நிலத்தோற்றம் உச்ச நிலையை அடைகிறது.

பின்முதிர்நிலை[தொகு]

அடிநில ஆறுகள் அடியிலுள்ள நீர்புகா பாறையை அடைந்து, சுண்ணாம்புப்பாறையைக் கரைப்பதுடன் அவை அகற்றப்படுவதால் அடிநிலக் குகைகள் நொறுங்கு யுவாலா எனப்படும் பள்ளங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.

முதுநிலை[தொகு]

சுண்ணாம்பு நிலத்தில் அடியில் நீர்புகா பாறை அரிப்பின் அடிமட்ட நிலையாகும். கரைதல் செயலலேயே குகைகளின் மேற்பகுதி மெல்லியதாக மாறி நொறுங்குகின்றன. பிறகு அகற்றப்படுகின்றன. முதுமை நிலையில் அகற்றப்பட்ட சுண்ணாம்புப் பாறை அழிந்த நிலையிலும் பாறைத்திட்டுகளாக காணப்படும்.