காரைமகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காரைமகள் (1927-2006) என்பவர் தமிழ்க் கவிஞர், பெண்ணுரிமைச் சிந்தனையாளர், செயற்பாட்டாளர் ஆவார். இவருடைய இயற்பெயர் பிளான்சே சேழான் ஆகும். காரை மகள், தமிழ் மகள் என்ற புனை பெயர்களில் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதியவர். இந்தியாவில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில் பிறந்தவர்.

பணிகள்[தொகு]

பாரதியாரின் கவிதைகளில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட காரைமகள், காரைக்காலில் மாதர் சங்கம் ஒன்றை உருவாக்கி பெண் கல்வி, பெண்ணுரிமை, பெண்களிடையே புதுமை எண்ணங்கள், விழிப்புணர்வு ஆகியவற்றைப் பரப்பினார்.

இவர் காரைக்காலில் தம் கணவர் ரோபோ சேழான் ஒத்துழைப்புடன் காரைக் கல்விக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி இலக்கியச் சொற்பொழிவுகளையும் கட்டுரைப் போட்டிகளையும் நடத்தினார்.

கவிஞர் சுத்தானந்த பாரதியார், திரு. வி. கலியாணசுந்தரனார் போன்ற தமிழ் அறிஞர்களைக் காரைக் கல்விக் கழகத்தில் அழைத்துப் பேச வைத்தார்.

காரை மகள் கவிதைகள் என்னும் ஒரு நூலை காரைமகளின் மகன் காரைமைந்தன் வெளியிட்டுள்ளார்.

சான்றாவணம்[தொகு]

இலட்சியப் பெண்டிர்- நூல் ஆசிரியர் தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு, அமைந்தகரை, சென்னை-600029

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரைமகள்&oldid=2128429" இலிருந்து மீள்விக்கப்பட்டது