கவுன்டர் ஸ்ட்ரைக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கவுன்டர் ஸ்ட்ரைக்
Box art for the Windows stand-alone release
ஆக்குனர் வால்வ் கார்ப்ரேசன்
வெளியீட்டாளர் வால்வ் கார்ப்ரேசன்
சியாரா ஸ்டுடியோஸ் (முன்னால்)
மைக்ரோசாப்ட் கேம் ஸ்டுடியோஸ் (எக்ஸ்பாக்ஸ்)
வினியோகஸ்தர் ஸ்டீம் (ஆன்லைன்)
வடிவமைப்பாளர் மின்ஃ "கூஸ்மேன்" லீ
ஜெஸ் கிளிஃப்
ஆட்டப் பொறி கோல்ட் எஸ ஆர் சி, ஹால்ஃப்-லைஃப்
பதிப்பு 1.6 (செப்டம்பர் 15, 2003)[1]
கணிமை தளங்கள் மைக்ரோசாப்ட் விண்டோஸ், எக்ஸ்பாக்ஸ்
வெளியான தேதி June 12, 1999 (1999-06-12) (Mod)
November 8, 2000 (Retail)
March 25, 2004 (Xbox)
பாணி முதல் நபர் சுடுதல்
வகை பல ஆட்டக்காரர்கள், ஒரு ஆட்டக்காரர்
ஊடகம் குறுந்தகடு
எண்ணிமத் தரவிரக்கம்
கணினி தேவைகள்
விண்டோஸ்

கவுன்டர் ஸ்ட்ரைக் (Counter-Strike) ஒரு உத்தி அடிப்படை முதல் நபர் சுடும் நிகழ்பட விளையாட்டு ஆகும். இது வால்வ் கார்ப்ரேசனால் உருவாக்கப்பட்டது. இந்த தொடரின் தொடர்ச்சியான வெளியீடுகளாவன கவுன்டர் ஸ்ட்ரைக்:கன்டிஷன் ஜீரோ, கவுன்டர் ஸ்ட்ரைக்:சோர்ஸ், கவுன்டர் ஸ்ட்ரைக்:குளோபல் அஃபென்சிவ் ஆகியவை ஆகும். இதில் விளையாடுபவர் தீவிரவாதி அல்லது எதிர் தீவிரவாதி என இருவிதங்களாக விளையாடலாம். இது பல சுற்றுகளாக விளையாடப்படும் விளையாட்டு. ஒவ்வொரு சுற்றும் கொடுக்கப்பட்ட குறிக்கோளை முடிப்பதன் மூலமாகவோ அல்லது எதிர் அணியினரை அழிப்பதன் மூலமாகவோ முடிவுக்கு வரும்.

விளையாடுதல்[தொகு]

கவுன்டர் ஸ்ட்ரைக் ஆனது முதல் நபர் சுடும் நிகழ்படவிளையாட்டு. இதில் விளையாடுபவர் தீவிரவாத அணி அல்லது எதிர்தீவிரவாத அணி என ஏதாவதொன்றில் சேர்ந்து கொள்ளலாம்.அதன் பிறகு எதிர் அணியினரை முழுமையாக அழிக்கவேண்டும் அல்லது கொடுக்கப்பட்ட குறிக்கோளை முடிக்க வேண்டும்.விளையாடுபவர் நான்கு விதமான உருவங்களில் ஏதாவதொன்றை தங்கள் உருவமாக தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

விளையாட்டு ஆரம்பித்தவுடன் ஆட்டக்காரர்கள் தங்களைத் தயார்செய்து கொள்ளவும், கருவிகள் வாங்கவும் சிறிதுநேரம் கொடுக்கப்படும். கவுன்டர் ஸ்ட்ரைக்கில் வாங்கக்கூடிய இடங்களில் மட்டுமே விளையாடுபவர் கருவிகளை வாங்க இயலும். இது பெரும்பாலும் அவர்கள் உருவாகும் இடங்களாகவே இருக்கும். கவுன்டர் ஸ்ட்ரைக் விளையாட்டில் தீவிரவாத அணியில் இருந்தால் விளையாடுபவர் ஒன்று குண்டுவைக்க வேண்டும் அல்லது எதிர் தீவிரவாத அணியினர் பணயக்கைதிகளை விடுவிப்பதை தடுக்க வேண்டும். எதிர் தீவிரவாத அணியில் இருந்தால் அப்படியே இதற்கு மாறாக செய்ய வேண்டும். இந்த விளையாட்டில் வெவ்வேறு விதமான வரைபடங்களை விளையாடுபவர் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.இதை குறும்பரப்பு பிணையம் மூலமாகவும் நிறைய பேர் சேர்ந்து விளையாடலாம். இந்த விளையாட்டில் ஒருவர் பார்வையாளராக கூட இருக்க இயலும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. CSNation.net : Counter-Strike version history.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கவுன்டர்_ஸ்ட்ரைக்&oldid=1367400" இருந்து மீள்விக்கப்பட்டது