கல்லூர் மணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிஞர் கல்லூர் மணியம் என்கிற மாங்குடி மலேசியாவில் எழுத்தாளர்களுள் பல திறமை கொண்ட ஒருவராவார். மாங்குடி மருதனார், வள்ளுவன் எனும் புனைப்பெயர்களிலும் எழுதியவர். முழுப் பெயர் பீலிவெட்டி ஆறுமுகம் மாங்குடி சாத்தையா பெரியையா கணேசன் மகன் மாங்குடி என்கிற மணியம் பிறந்த இடம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிமளம் ஒன்றியத்திலுள்ள கல்லூர்.

இவர் சிறந்த நாடக நடிகராகவும் விளங்கினார் தைபிங் ,பினாங் பள்ளிகளில் படித்து பின் சில காலம் சிங்கை வானொலியில் வேலை பார்த்து பின் மலாக்கா மற்றும் கோலாலம்பூரில் வாழ்ந்தவர். நன்கு வெண்பா மற்றும் குறள் எழுதும் சமுக சீர்திருத்த கவிஞர் கல்லூர் மணியம்.

1957 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டவர். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதிவந்தவர். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் தமிழகத்தில் சங்கொலி, கல்கி, மஞ்சரி, அமுதசுரபி, தாய் பிரசுரமாகியுள்ளன. சிறந்த மேடை பேச்சாளர். இவர் இந்தியாவில் ஆன்மிகச் செம்மலாக விளங்கியவர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லூர்_மணியம்&oldid=3238888" இலிருந்து மீள்விக்கப்பட்டது