கல்லிசேரி அழகியகாவு தேவி கோவில், செங்கன்னூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அழகியகாவு தேவி கோயில், இந்தியாவின் கேரளா, ஆலப்புழா மாவட்டத்தில் செங்கன்னூர் வட்டத்தில்கல்லிசேரியில் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இதன் மூலவர் பத்ரகாளி ஆவார். இந்த இந்துக் கோயில் மத்திய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள 30 கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் பண்டைய திராவிட சடங்குக்கலை வடிவமான படையணி ஆண்டுதோறும் நிகழ்த்தப்படுகிறது. இக்கோல் செங்கனூர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து4 கி.மீ. தொலைவில் உள்ளது.

நிர்வாகம்[தொகு]

உமையத்து கரா, மேப்பிரம், மழுக்கீர், தாய்மரவும் கரா ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு கராக்களின் குழுவால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது.

தெய்வங்கள்[தொகு]

இக்கோயிலின் மூலவர் பத்ரகாளி ஆவார். கருவறையில் மூலவரின் சிலை நான்கு கைகளுடன், வேதாளத்தின்மீது அமர்ந்த நிலையில் உள்ளது. இங்கு கரிம்காளி, யக்ஷியம்மா, ராட்சசு, நாகர்கள் போன்ற துணைத்தெய்வங்கள் உள்ளன.

திருவிழாக்கள்[தொகு]

ஆண்டுதோறும் மலையாள மாதமான கும்பத்தில் (பிப்ரவரி-மார்ச்) உத்ராடம் நட்சத்திரம் முதல் அஸ்வதி நட்சத்திர நாள் வரை எட்டு நாட்கள் படையணி திருவிழா கொண்டாடப்படுகிறது.[1]மேலும் கும்ப பரணி, மீனா பரணி, சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை போன்ற விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kallisseri