கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டமாகும். இத்திட்டம் தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாக பெயரிடப்பட்டது. ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தபட்டது. இத்திட்டம் 2023 செப்டம்பர் 15 ஆம் நாள் தமிழக முன்னாள் முதல்வர் கா. ந. அண்ணாதுரையின் பிறந்த நாளில் மு. க. ஸ்டாலினால் துவக்கிவைக்கப்பட்டது.

பின்னணியும், செயல்படுத்தலும்[தொகு]

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க தேர்தல் அறிக்கையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதாக தி.மு.கழகத்தால் வாக்குறுதி கொடுக்கபட்டது. தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இத்திட்டம் 2023 தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி திடத்திற்கான விண்ணப்பங்களை வழங்கும் முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் சூலை 24 முதல் ஆகத்து 14 வரை நடைபெற்றது.[1] திட்டத்தில் பயன்பெற தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தகுதியானவர்கள் என முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர்.[2] திட்டத்தில் பயன்பெற தகுதி பெறாதவர்கள் மேல் முறையீடு செய்ய வாய்ப்புகள் வழங்கபட்டன.

தகுதிகள்[தொகு]

  • குடும்பத்தில் ஒருவர் மட்டுமே உரிமைத் தொகை பெற தகுதியானவராவார்.
  • அரசு பணிபுரியும் அல்லது வருமானவரி செலுத்தும் பெண்கள் பயன் பெற முடியாது.
  • கணவர்கள் வருமான வரி செலுத்தும் அல்லது ஜிஎஸ்டி வருமானத்தை தாக்கல் செய்பவர்களின் மனைவிகள் இத்திட்டத்தில் பலன் பெற முடியாது.
  • அரசு ஓய்வூதியம் பெறுபவராகவோ, ஓய்வூதியம் பெறுபவரின் மனைவியாகவோ இருப்பவர்கள் பலன் பெற முடியாது.
  • சொந்தமாக மகிழுந்து வைத்திருப்பவர்கள் பலன் பெற முடியாது.

பிற மாநிலங்களில் தாக்கம்[தொகு]

  • தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கருநாடகத்தில் இ.தே.கா அரசின் முதல்வர் சித்தராமையாவால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கும் கிரகலட்சுமி என்ற திட்டத்தை 2023 ஆகத்து மாதம் துவக்கிவைத்தார்.[3]
  • இராசத்தான் மாநிலத்தில் இ.தே.கா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிரகலட்சுமி உத்தரவாதத் திட்டம் என்ற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ 1000 ரூபாயை வழங்குவதாக 2023 ஆம் ஆண்டு தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://tamil.oneindia.com/news/chennai/kalaignar-magalir-urimai-thogai-2nd-phase-rs-1000-to-be-credited-in-bank-account-from-today-555531.html?story=1 மகளிர் உரிமைத் தொகை.. வங்கிக்கணக்கில் இன்று முதல் ரூ. 1000 வரவு.. செக் பண்ணுங்க இல்லத்தரசிகளே, ஒன்இந்தியா, 9, நவம்பர் 2023
  2. "கலைஞர் மகளிர் உரிமைத் தொகையும் உளவியல் மாற்றங்களும் - ஒரு பார்வை #TNEmpowersWomen". 2023-09-15. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  3. தினத்தந்தி (2023-08-31). "கர்நாடகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டம் தொடக்கம்". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  4. "Gruha Lakshmi Guarantee Scheme Rajasthan 2023: You Will Get Rs 10,000 Every Year (Rajasthan Gruha Lakshmi Guarantee Yojana In Hindi)" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-10-27. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  5. காமதேனு (2023-10-26). "ஆண்டு தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10 ஆயிரம் - ராஜஸ்தானில் காங்கிரஸ் வாக்குறுதி!". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)

வெளி இணைப்புகள்[தொகு]