கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம் என்பது தமிழக அரசால் 7 ஆகஸ்ட் 2021 இல் தொடங்கப்பட்ட திட்டமாகும்.[1] தமிழக அரசின் இந்து சமய நிலை அமைச்சகம் இத்திட்டத்தை முன்னெடுக்கிறது.

துவக்கம்[தொகு]

சென்னை நுங்கம்பாக்கம் அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழக முதல்வராக இருந்த ஸ்டாலின் நாகலிங்க மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்.

முன்னாள் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.[2]

தல மரங்கள்[தொகு]

இந்து சமய‌த்தில் கோவில் அமைக்கப்படும் இடத்தில் இருந்த மரங்கள் தல மரங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அம்மரங்கள் நிறைந்த காடுகளில் கோயில்கள் கட்டப்பட்டிருந்தாலும், நாளாடைவில் கோயில் மற்றும் கோயிலை சுற்றியுள்ள இடங்களில் அம்மரங்கள் அழிந்துள்ளன.

கோயிலில் இருந்த தலவிருட்ச மரத்தின் பகுதிகளை பக்தர்கள் வணங்கி வருகின்றனர். சில கோயில்களில் அரிதான மரங்கள் உள்ளன.

இலக்கு[தொகு]

கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் மூலமாக கோயில்களின் தலமர கன்றுகள் நடப்படுகின்றன. மூன்று மாதங்களுக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய கோவில்களில் தல மரங்களாக உள்ள மா மரம், புன்னை மரம், வில்வ மரம், செண்பகம் மரம், மருதம் மரம் போன்ற பல்வேறு வகையான தல விருட்ச மரக்கன்றுகள் இந்த திட்டத்தின் மூலம் நடப்படுகின்றன.[2]

பராமரிப்பு[தொகு]

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் சிலவற்றில் தல விருட்ச மரங்கள் இருந்தாலும், இத்திட்டம் மூலம் அம்மரங்கள் பராமரிக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக கோயில்களில் 'கலைஞர்' தல மரக்கன்று நடும் பணி: இந்து சமய அறநிலையத் துறை தகவல்". Hindu Tamil Thisai. 23 செப்., 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 2.2 மலர், மாலை (7 ஆக., 2021). "1 லட்சம் தல மரக்கன்றுகள் நடும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்". www.maalaimalar.com. {{cite web}}: Check date values in: |date= (help)