கலீபா நகரம் (அபுதாபி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலீபா நகரம்என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியின் புறநகர்ப் பகுதிக் குடியேற்றங்களுள் ஒன்று. பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் வாழும் இப் பகுதி அபுதாபியில் இருந்து துபாய் செல்லும் சாலையில் அபுதாபி நகரின் மையப்பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இது கலீபா நகரம் ஆ, கலீபா நகரம் B, புதிய கலீபா நகரம் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் கலீபா நகரம் ஆ கூடுதல் வளர்ச்சியடைந்த பகுதியாகும்.

இங்கே உள்ள ஒரு சாலையோரமாக வரிசையாக அமைந்த கட்டிடங்களின் கீழ்த்தளத்தில் கடைகளும், உணவுச்சாலைகளும், வங்கி முதலியனவும், பிற சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் உள்ளன. இதனால் இப்பகுதி இக்குடியேற்றத்தின் சேவை மையமாகத் தொழிற்படுகின்றது. இம் மையப் பகுதியை அண்டிச் சில பாடசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள வதிவிடக் கட்டிடங்கள் பெரும்பாலும் இரண்டு மாடிகளைக் கொண்ட தனித்தனி வீடுகளாகும். அபுதாபி நகருக்கு அண்மையாக உள்ள குடியிருப்புப் பகுதிகளில் தங்குமிடங்களுக்கான வாடகை அதிகமாக இருப்பதால், அபுதாபியில் வேலை செய்யும் பல வெளிநாட்டவர் ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் தங்குமிட வசதி கிடைக்கக்கூடிய இப் பகுதியை நோக்கி வருகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலீபா_நகரம்_(அபுதாபி)&oldid=2943503" இலிருந்து மீள்விக்கப்பட்டது