கர்கென்டல் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்கென்டல் விளைவு (Kirkendall effect) கர்கென்டல் விளைவு என்பது உலோக அணுக்களின் பரவல் விகிதங்களில் உள்ள வேறுபாட்டின் விளைவாக நிகழும் இரண்டு உலோகங்களுக்கு இடையிலான இடைமுகத்தின் இயக்கம் ஆகும். தூய்மையான உலோகம் மற்றும் அந்த உலோகத்தைக் கொண்ட ஒரு உலோகக்கலவை இடையே அவற்றின் இடைமுகத்தில் கரையாத குறிப்பான்களை வைப்பதன் மூலமும், அணு பரவல் சாத்தியமான வெப்பநிலையில் வெப்பப்படுத்துவதன் மூலமும் இதன் விளைவைக் காணலாம்; குறிப்பான்களுடன் தொடர்புடைய எல்லை நகரும்.

இந்த செயல்முறைக்கு 1941 முதல் 1946 வரை வெய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியல் உதவிப் பேராசிரியரான எர்னஸ்ட் கர்கென்டல் (1914-2005) பெயரிடப்பட்டது. விளைவின் கண்டுபிடிப்பை விவரிக்கும் கட்டுரை 1947 இல் வெளியிடப்பட்டது. [1]

கர்கென்டல் விளைவு முக்கியமான நடைமுறை விளைவுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் ஒன்று உலோக பிணைப்புக்கான பல்வேறு வகையான கலப்புலோகங்களின் எல்லை இடைமுகத்தில் உருவாகும் வெற்றிடங்களைத் தடுப்பது அல்லது அடக்குவது. இவை கர்கென்டல் வெற்றிடங்கள் என குறிப்பிடப்படுகின்றன.

வரலாறு[தொகு]

கர்கென்டல் விளைவு 1947 ஆம் ஆண்டில் எர்னஸ்ட் கர்கென்டல் மற்றும் ஆலிஸ் ஸ்மிகெல்ஸ்காஸ் ஆகியோரால் பித்தளையில் விரவுதல் நிகழ்தலைப் பற்றிய தொடர்ச்சியான ஆராய்ச்சியின் போதுகண்டுபிடிக்கப்பட்டது. [2] புகழ்பெற்ற விளைவை இவர்கள் கண்டுபிடித்தது தொடர்பான அறிக்கை பித்தளை பரவல் குறித்த அவரது தொடர் கட்டுரைகளில் மூன்றாவதாகும். இந்த மூன்றாவது அறிக்கையே கர்கென்டல் விளைவு பற்றிய முதல் அறிக்கை ஆகும். அவரது இரண்டாவது ஆய்வறிக்கை ஆல்பா பித்தளைகளில் தாமிரத்தை விட துத்தநாகம் விரைவாகப் பரவியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Smigelskas, A. D.; Kirkendall, E. O. (1947). "Zinc Diffusion in Alpha Brass". Trans. AIME 171: 130–142. 
  2. Nakajima, Hideo (1997). "The Discovery and Acceptance of the Kirkendall Effect: The Result of a Short Research Career". JOM 49 (6): 15–19. doi:10.1007/bf02914706. http://www.tms.org/pubs/journals/jom/9706/nakajima-9706.html. பார்த்த நாள்: 28 April 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்கென்டல்_விளைவு&oldid=3189651" இலிருந்து மீள்விக்கப்பட்டது