கரிமயிட்ரியம் வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரிமயிட்ரியம் வேதியியல் (Organoyttrium chemistry) கார்பன்-இட்ரியம் பிணைப்பு குறித்து ஆய்வு செய்யும் அறிவியல் துறையாகும். இத்துறை கல்லூரி அளவில் ஆய்வுக்குரிய ஒரு துறையாக உள்ளது என்பதைத் தவிர வேறு பரந்த பயன்பாடு எதையும் கொண்டிருக்கவில்லை. இட்ரியம்(III) குளோரைடு ஒரு தொடக்க வேதிப்பொருளாக இத்துறையில் பயன்படுத்தப்படுகிறது. இட்ரியம்(III) ஆக்சைடுடன் அடர் ஐதரோகுளோரிக் அமிலமும், அமோனியம் குளோரைடும் சேர்த்து வினைபுரியச் செய்வதால் இட்ரியம்(III) குளோரைடு தயாரிக்கப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Turner 1920, p.492
  2. Spencer 1919, p.135
  3. Schumann, H.; Fedushkin, I. L. (2006). "Scandium, Yttrium & The Lanthanides: Organometallic Chemistry". Encyclopedia of Inorganic Chemistry. John Wiley & Sons. doi:10.1002/0470862106.ia212.