கதிரவமறைப்பு, ஏப்ரல் 30, 1957

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏப்பிரல் 30, 1957-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
Map
மறைப்பின் வகை
இயல்புவலய மறைப்பு
காம்மா0.9992
அளவு0.9799
அதியுயர் மறைப்பு
காலம்-
ஆள் கூறுகள்70°36′N 40°18′E / 70.6°N 40.3°E / 70.6; 40.3
பட்டையின் அதியுயர் அகலம்- கிமீ
நேரங்கள் (UTC)
பெரும் மறைப்பு0:05:28
மேற்கோள்கள்
சாரோசு118 (65 of 72)
அட்டவணை # (SE5000)9414

1957 ஏப்ரல் 30 அன்று வலயக் கதிரவமறைப்பு ஏற்பட்டது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும் போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. ந்லாவின் தோற்ற விட்டம் சூரியனை விட சிறியதாக இருக்கும் போது ஒரு வலயக் கதிரவமறைப்பு .ஏற்படுகிறது, இது சூரியனின் பெரும்பாலான ஒளியைத் தடுக்கிறது. அப்போது சூரியன் வலயம் போல தோற்றமளிக்கும். புவியின் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தில் ஒரு பகுதி மறைப்பாக ஒரு வலய மறைப்பு தோன்றுகிறது. இந்த வலயக் கதிரவமறைப்பு மையமற்றதாகும். அதற்கு பதிலாக, மறைப்பு முழுவதும் அகநிழலில் பாதிக்கு மேல் விண்வெளியில் விழுந்தது. காம்மாவின் மதிப்பு 0.9992. வடக்கு சோவியத் ஒன்றியம் (இன்றைய உருசியா ), பியர் தீவு, நார்வேயின் சுவால்பார்டு தீவின் தெற்கு ஆகிய பகுதிகளில் காணப்பட்டது.

இது சூரியச் சாரோசு 118 ஆம் தொடரின் பகுதியாகும்.ந்தி நிகழும் 57 குடைநிழல் மறைப்புகளில் இதுவே கடைசித் தொடராக நிகழ்ந்தது. முதலாவது மறைப்பு கி.பி 947 இல் நிகழ்ந்தது. 57னஆவதான கடைசி மறைப்பு 1957 இல் நிகழ்ந்தது. மொத்த கால அளவு 1010 ஆண்டுகள்.

இது ஒரு வலயக் கதிரவமறைப்பு என்றாலும், ஒரு மையமற்ற கதிரவமறைப்பாகும்.

தொடர்புடைய மறைப்புகள்[தொகு]

1957 முதல் 1960 வரையிலான கதிரவமறைப்புகள்,[தொகு]

இந்தக் கதிரவமறைப்பு அரையாண்டுத் தொடரின் பகுதியாகும்.  இத்தொடரின் கதிரவமறைப்பு தோராயமாக 177 நாட்கள், 4 மணிகளுக்கு (ஓர் அரையாண்டுக்கு)  ஒருமுறை நிலா வட்டணையின் மாற்றுக் கணுக்களில் நிகழும்.[1]

1957 முதல் 1960 வரையிலான கதிரவ மறைப்புத் தொடர்
இறங்குமுகக் கணு   ஏறுமுகக் கணு
சாரோசு படம் சாரோசு படம்
118

1957 ஏப்பிரல் 30

வலயr (மையமற்றது)
123

1957 அக்தோபர் 23

முழு (மையமற்றது)
128

1958 ஏப்பிரல் 19

வலய
133

1958 அக்தோபர் 12

முழு
138

1959 ஏப்பிரல் 8

வலய
143

1959 அக்தோபர் 2

முழு
148

1960 மார்ச்சு 27

Partial
153

1960 செபுதம்பர் 20

Partial

சாரோசு 118[தொகு]

இது சாரோசு 118 சுழற்சியின் ஒரு பகுதியாகும். இதில், ஒவ்வொரு 18 ஆண்டுகள், 11 நாட்களுக்கும், 72 நிகழ்வுகள் ஏற்படும். கிபி 803 மே 24 அன்று பகுதி கதிரவமறைப்புடன் தொடர் தொடங்கியது. இது ஆகத்து 19, கிபி 947 முதல் அக்தோபர் 25, 1650 வரையில் முழு மறைப்புகளையும், நவம்பர் 4, 1668 முதல் நவம்பர் 15, 1686 வரையில்ல் கலப்பு மறைப்புகளையும், நவம்பர் 27, 1704 முதல் ஏப்ரல் 30, 1957 வரையில் ஆண்டுவாரி மறைப்புகளையும் கொண்டுள்ளது. இது ஜூலை 15, 2083 அன்று ஒரு பகுதி மறைப்பாக 72 ஆம் நிகழ்வில் தொடர் முடிவடைகிறது. மிக நீண்ட நேரமாக,.மே 16, 1398 அன்று 6 மணித்துளிகள், 59 நொடிகள் மறைப்பு நிகழ்கிறது.

மெட்டானிக் தொடர்[தொகு]

மெட்டானிக்கத் தொடரில் கதிரவமறைப்பு19 ஆண்டுகளுக்கு(6939.69 நாட்களுக்கு) ஒருமுறை 5 சுழற்சிகள் நிகழ்கிறது. கதிரவமறைப்புகள் ஏறத்தாழ அதே நாட்காட்டி நாலின் ஏற்படுகிறது. மேலும்,  இதன் எண்மத் துணைத்தொடர் ஒவ்வொரு 3.8 ஆண்டுகளில்(1387.94 நாட்களில்)  ஐந்தில் ஒரு பங்கு காலத்துக்கு ஒருமுறை நிகழ்கிறது.

வடக்கில் இருந்து தெற்கு நோக்கி முன்னேறியபடி 21 கதிரவ மறைப்பு நிகழ்வுகள் சூலை 11, 1953 முதல் சூலை 11, 2029 வரை நிகழ்ந்தன.
சூலை 10–12 ஏப்பிரல் 29–30 பிப்ரவரி 15–16 திசம்பர் 4–5 செபுதம்பர் 21–23
116 118 120 122 124


சூலை 11, 1953


ஏப்பிரல் 30, 1957


பிப்ரவரி 15, 1961


திசம்பர் 4, 1964


செபுதம்பர் 22, 1968
126 128 130 132 134


சூலை 10, 1972


ஏப்பிரல் 29, 1976


பிப்ரவரி 16, 1980


திசம்பர் 4, 1983


செபுதம்பர் 23, 1987
136 138 140 142 144


சூலை 11, 1991


ஏப்பிரல் 29, 1995


பிப்ரவரி 16, 1999


திசம்பர் 4, 2002


செபுதம்பர் 22, 2006
146 148 150 152 154


சூலை 11, 2010


ஏப்பிரல் 29, 2014


பிப்ரவரி 15, 2018


திசம்பர் 4, 2021


செபுதம்பர் 21, 2025
156 158 160 162 164


சூலை 11, 2029

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரவமறைப்பு,_ஏப்ரல்_30,_1957&oldid=3939829" இலிருந்து மீள்விக்கப்பட்டது