கண்ணன் நாகனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்ணன் நாகனார் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். பரிபாடல் ஐந்தாம் பாடலை இசையமைத்துப் பாடியவர். செவ்வேள் மீது இளவெயினனார் என்னும் புலவர் 81 அடிகளில் பாடிய இந்தப் பாடலை இவர் பாலையாழ் என்னும் சங்ககால இசையில் பாடினார்.

முருகனிடம் பொன்னும் பொருளும் விரும்பாமல், அருள், அன்பு, அறம் ஆகிய நற்பண்புகளைத் தரும்படி வேண்டும் இந்த மனப்பாங்கு இந்த இசைவாணரைப் பெரிதும் கவர்ந்த்து எனலாம். [1]

அடிக்குறிப்பு[தொகு]

  1. யாஅம் இரப்பவை
    பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
    அருளும், அன்பும், அறனும், மூன்றும்
    உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே! (பரிபாடல் 5)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணன்_நாகனார்&oldid=1635673" இலிருந்து மீள்விக்கப்பட்டது