கட்டற்ற கோழி வளர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்காட்லாண்டின் வணிக ரீதியான கட்டற்ற கோழி வளர்ப்பு

கட்டற்ற கோழி வளர்ப்பு என்பது மேச்சல் முறையுடன் கூடிய கோழி வளர்ப்பாகும். இந்த முறையில் கோழிகள் பகல் முழுவதும் தன்னுடைய இரையை நிலங்களில் தேடிப் பெற்றுக் கொள்கின்றன. இரவு நேரங்களில் பண்ணையில் அடைந்து கொள்கின்றன.

தமிழகத்தில் மேச்சல் முறை அல்லது திரிசல் முறை என்று இந்த வளர்ப்பு முறை அழைக்கப்படுகிறது. பெரும்பாலான நாட்டுக் கோழிகள் தங்களுக்கு தேவையான உணவை தானே தேடிப் பெற்றுக் கொள்ளும் குணம் கொண்டமையால் இவ்வாறான முறைகளில் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

புறக்கடை கோழி வளர்ப்பு முறையில் மிகச் சிறிய அளவில் குறைந்த கோழிகளை வளர்க்கும் விதத்தினை அடிப்படையாகக் கொண்டு பெரிய அளவில் இந்த வளர்ப்பு முறை கையாளப்படுகிறது. இந்த முறைக்கு மேச்சல் நிலங்களுடன் கூடிய பண்ணை கொட்டகை அமைக்கப்படுகின்றன.

பயன்கள்[தொகு]

  • மேச்சல் முறையில் கோழிகளுக்கு அதிக தீவனங்களை நாம் கொடுக்க தேவையில்லை. அதனால் தீவன செலவு மட்டுப்படும்
  • கோழிகள் தங்களுக்கு தேவையானதை தேடி உண்பதால் ஆரோக்கியமான கறி மற்றும் முட்டைகள் கிடைக்கும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டற்ற_கோழி_வளர்ப்பு&oldid=2442805" இலிருந்து மீள்விக்கப்பட்டது