கசூர் குழந்தை பாலியல் துன்புறுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கசூர் குழந்தை பாலியல் துன்புறுத்தல் (Kasur child sexual abuse scandal) என்பது 2006 முதல் 2014 வரை பாக்கித்தானின் பஞ்சாப், கசூர் மாவட்டத்தில் உள்ள உசைன் கான்வாலா கிராமத்தில் நடந்த ஒரு தொடர்ச்சியான சிறுவர்களுடனான பாலியல் முறைகேடாகும், இது 2015 இல் ஒரு பெரிய அரசியல் ஊழலில் முடிவடைந்தது. குழந்தைகள் கட்டாய பாலியல் செயல்களைச் செய்வதைக் காட்டும் நூற்றுக்கணக்கான நிகழ்படத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பல்வேறு பாக்கிஸ்தான் ஊடக நிறுவனங்கள் 280 முதல் 300 குழந்தைகள், இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கண்டறியப்பட்டனர். [1] இந்த ஊழலில் ஆபாச தளங்களுக்கு குழந்தை ஆபாசத்தை விற்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு இருந்தது, மேலும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை மிரட்டி பணம் பறித்தது. [2]

இந்த ஊழல் நாடு தழுவிய கோபத்தை ஏற்படுத்தியது, [2] பஞ்சாப் காவல்துறை மற்றும் ஆளும் பாக்கித்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கசூரின் மாகாண சட்டமன்ற உறுப்பினர் மாலிக் அகமது சயீத் கான் ஆகியோர் முறைகேட்டை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. [3]

இது பாக்கித்தான் வரலாற்றில் மிகப்பெரிய குழந்தைகள் துன்புறுத்தலாக செய்தி நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளால் குறிப்பிடப்பட்டது . [4] பெரிய அளவிலான பொது கண்டனத்தைத் தவிர, 50 பாக்கித்தானிய மதகுருமார்கள் மற்றும் மத அறிஞர்கள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க ஃபத்வா (மத ஆணை) வெளியிட்டனர், மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இவர்களது பெற்றோர்களுக்கும் அரசு ஆறுதல் கூற வேண்டும் என்று கோரினர். [5]

துன்புறுத்தல்[தொகு]

அசுரப் ஜாவேத், நேஷன் பத்திரிக்கையாளர் இந்த சம்பவத்தில் 20 முதல் 25 நபர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் இவர்கள் 400 நிகழ்படங்கள் வரை சிறுவர்களுடனான பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்தத் தகவலை வெளிக் கொண்டுவந்தார்.[1] ஒரு சம்பவத்தில், பாதிக்கப்பட்ட ஒருவரின் தந்தை, தனது மகன் பாலியல் வன்கலவி செய்யப்பட்ட நிகழ்படத்தினை வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்தவர்களிடம் 1.2 மில்லியன் டாலர்களை கொடுத்துள்ளார். [6]

காவல் துறையினரின் ஈடுபாடு[தொகு]

காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்[தொகு]

8 ஆகஸ்ட் 2015 அன்று, உசைன் கான்வாலா மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தீபல்பூர் சாலையில் உள்ள டோலாய்வாலா கிராமத்தில் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுப்பதற்காக கிராமத்திற்கு செல்லும் சாலைகளை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர்; மொபீன் அகமது தலைமையிலான கும்பலைத் தடுக்க ஒரு காவலர் குழு முயன்றபோது, இவர்கள் கற்களை வீசினர். காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் தடியடி நடத்தியதால், தீபல்பூர் சாலையில் காவல் துறையினரின் வாகனங்கள் சேதமடைந்தன. துணைக் காவல் கண்காணிப்பாளர்களான அசன் பரூக் கும்மான் மற்றும் ஆரிஃப் ரஷீத்; கந்தா சிங் SHO அக்மல் கவுசர்; அக்பர், சஜித், ரியாஸ், நயீம், அகமது அலி, அக்பர் கனி மற்றும் முஹம்மது அக்மல் ஆகிய காவலர்களும், 15 எதிர்ப்பாளர்களும் காயமடைந்தனர். [7]

அரசாங்கத்தின் எதிர்வினை[தொகு]

ராணா சனாவுல்லா சர்ச்சை[தொகு]

பஞ்சாப் அரசாங்கத்தின் ஆரம்ப அறிக்கை 8 ஆகஸ்ட் 2015 அன்று பஞ்சாப் சட்ட அமைச்சர் ராணா சனாவுல்லாவிடம் இருந்து வந்தது, அந்த அறிக்கையில் குழந்தை பாலியல் வன்கலவி செய்யப்படவில்லை என்று ஒரு அரசாங்க விசாரணைக் குழு முடிவு செய்ததாகக் கூறினார். சனாவுல்லா, "நிலத் தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் 'போலி வழக்குகள்' பதிவு செய்துள்ளனர் என்று சனாவுல்லா கூறினார்." [8]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Javed, Ashraf (8 August 2015). "Country's biggest child abuse scandal jolts Punjab". The Nation. http://nation.com.pk/national/08-Aug-2015/country-s-biggest-child-abuse-scandal-jolts-punjab. பார்த்த நாள்: 11 August 2015. 
  2. 2.0 2.1 "Kasur child porn case: Amid nationwide outrage, PM vows to punish culprits". The Express Tribune. 10 August 2015. http://tribune.com.pk/story/935123/kasur-child-porn-scandal-amid-nationwide-outrage-pm-vows-to-punish-culprits/. பார்த்த நாள்: 11 August 2015. 
  3. "Out on streets: ‘Kasur DPO, RPO and lawmakers must be sacked’". http://tribune.com.pk/story/935812/out-on-streets-kasur-dpo-rpo-and-lawmakers-must-be-sacked/. 
  4. The Express Tribune: Kasur child pornography ring: Lawyer accuses police of protecting culprits
  5. "Ulema decree to ‘hang’ Kasur child molesters". ARY News. 10 August 2015. http://arynews.tv/en/ulema-decree-to-hang-kasur-child-molesters. பார்த்த நாள்: 11 August 2015. 
  6. "Growing child abuse scandal in Pakistani village". பார்க்கப்பட்ட நாள் 12 August 2015.
  7. Ansari, Afzal (8 August 2015). "Two DSPs among 25 injured as mob takes on police". Dawn. http://www.dawn.com/news/1198473. பார்த்த நாள்: 11 August 2015. 
  8. "Kasur child molestation scandal baseless, says inquiry report". Dawn. 8 August 2015. http://www.dawn.com/news/1199249. பார்த்த நாள்: 11 August 2015.