ஒய். என். சுக்தாங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒய் என் சுக்தாங்கர்
ஒடிசாவின் 6வது ஆளுநர்
பதவியில்
31 சூலை 1957 – 15 செப்டம்பர் 1962
முன்னையவர்பீம் சென் சச்சார்
பின்னவர்அஜுதியா நாத் கோஸ்லா
2வது இந்திய அமைச்சரவைச் செயலாளர்
பதவியில்
1953–1957
பிரதமர்ஜவகர்லால் நேரு
முன்னையவர்நா. ரா. பிள்ளை
பின்னவர்மு. க. வெல்லோடி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியா

யஷ்வந்த் நாராயண் சுக்தங்கர், (இந்தியப் பேரரசின் ஒழுங்கு) (1897 – ?) ஒரு இந்திய அரசு ஊழியர் ஆவார். இந்தியாவின் இரண்டாவது அமைச்சரவை செயலாளராகவும் ஒடிசாவின் முன்னாள் ஆளுநராகவும் இருந்தார்.

தொழில்[தொகு]

இவர் 1921இல் இந்தியாவின் சொந்த அலுவலர் தொகுதியின் இந்தியக் குடிமைப் பணியில் உறுப்பினராக இருந்தார். அவர் இரண்டாம் உலகப் போரின்போது இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு அரசு ஊழியர்களைக் கொண்ட நிதி மற்றும் வணிகக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். இவர், பண்ணாட்டு வணிகத்தில் நிபுணராகவும் இருந்தார். மேலும் இவர் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தில் செயலாளராகவும்,[1][2] இந்திய அமைச்சரவைச் செயலாளராகவும் 1953 மே 14 முதல் 1957 சூலை 31 வரை பணியாற்றினார்.[3] இந்தியாவின் இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்த இந்திய திட்ட ஆணையத்தின் செயலாளராகவும் பணியாற்றினார்.[4]

ஆளுநர்[தொகு]

அமைச்சரவை செயலாளராக ஓய்வு பெற்ற பின்னர், இவர் ஒடிசாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் 1957 சூலை 31 முதல் 1962 செப்டம்பர் 15 வரை பணியாற்றினார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Exchange of Letters regarding Trade". Ministry of External Affairs. பார்க்கப்பட்ட நாள் 17 March 2013.
  2. "Our Governors". Raj Bhavan, Government of Orisaa, Bhubaneshwar. Archived from the original on February 25, 2012. பார்க்கப்பட்ட நாள் 2 February 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Cabinet Secretaries Since 1950". Cabinet Secretariat, Government of India, New Delhi. Archived from the original on 10 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 2 February 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "2nd Five year Plan". Planning Commission, Yojna Bhavan, Government of India, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 2 February 2012.
  5. "Orissa Legislative Assembly". Lok Sabha Secretariat, Government of India, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 2 February 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒய்._என்._சுக்தாங்கர்&oldid=3928385" இலிருந்து மீள்விக்கப்பட்டது