ஒப்பு காமா கதிர் மாறிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒப்பு காமா கதிர் மாறிலி (Specific gamma ray constant) என்பது ஒரு மில்லி கியூரி செயல் திறனுடைய கதிர் ஐசோடோப்பிலிருந்து ஒரு சென்டிமீட்டர் தொலைவில் ஒரு மணி நேரத்தில் பெறப்படும் கதிர் வீச்சளவாகும் (Exposure). இது τ இனால் குறிக்கப்படும். ஒப்பு காம்மா கதிர் மாறிலி கதிர் மருத்துவத்தில் பயன்படும் கதிர் ஐசோடோப்புகளின் ஒரு முக்கிய பண்பாகும்.

τ = R/mCi/cm/hr .கதிர்வீச்சி அளவு இராண்ஜனில் (R) கொடுக்கப்படுகிறது.

மருத்துவத்தில் பயன்படும் சில ஐசோடோப்புகளின் τ மதிப்பு

  • சீசியம் 137 ---- 3.3
  • கோபால்ட் 60 ---- 13.2
  • இரிடியம் 192---- 4.8
  • இலாந்தனம் 140---- 11.3
  • பேரியம் 133 ---- 2.4
  • ரேடியம் 226 ---- 8.25 என்று உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்பு_காமா_கதிர்_மாறிலி&oldid=2745988" இலிருந்து மீள்விக்கப்பட்டது