ஐஓஎஸ் 7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Apple iOS 7 Logo.svg
ஐஓஎஸ் 7
(ஐஓஎஸ் குடும்பம்)
திரைக்காட்சி
IOS 7 home screen.png
ஐபோன் 5இல் இயங்கும் ஐஓஎஸ் 7
விருத்தியாளர்
ஆப்பிள் நிறுவனம்
Web site: [www.apple.com/ios/ அதிகாரப்பூர்வ இணையதளம்]
வெளியீட்டுத் தகவல்
வெளியீட்டுத் திகதி: September 18, 2013 info
தற்போதைய பதிப்பு: 7.0.4 (11B554a) (நவம்பர் 14, 2013; 10 மாதங்கள் முன்னர் (2013-11-14)) info
முன்னைய பதிப்பு: 7.1 (11D5099e) (நவம்பர் 18, 2013; 10 மாதங்கள் முன்னர் (2013-11-18)) [மேற்கோள் தேவை]
மூலநிரல் : Closed, with open-source components
அனுமதி: Proprietary EULA, except for open-source components
கருவகம் வகை: Hybrid (XNU)

ஐஓஎஸ் 7 எனப்படுவது அப்பிள் நிறுவனத்தினால் ஐஓஎஸ் 6 இன் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட ஒரு நகர்பேசி இயங்குதளப் பதிப்பாகும். ஜூன் 10, 2013 அன்று இந்த இயங்குதளப் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டதுடன், செப்டம்பர் 18, 2013 அன்று பொதுப் பாவனைக்காக வெளியடப்பட்டது. பல செயற்பாடு மாற்றங்களைக் கொண்டிருப்பதுடன், பயனர் இடைமுகம் ஐஓஎஸ் 6இல் இருந்து பெருமளவில் மாறுபட்டுள்ளது.

வரலாறு[தொகு]

ஜூன் 10, 2013 அன்று அப்பிள் நிறுவனத்தின் ஒரு மாநாட்டில் ஐஓஸ் 7 பீட்டா பதிப்பின் முதல் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மாநாட்டின் போது இந்த இயங்குதளம் அப்பிள் ஐபோன் 4 மற்றும் ஐபொட் டச் (5ம் தலைமுறை) ஆகிய கருவிகளுக்கு ஆதரவு வழங்கும் என்றும அறிவிக்கப்பட்டது. ஜூன் 24 அன்று பீட்டா பதிப்பின் இரண்டாம் பதிப்பு அறிமுகம் செய்யபட்டதுடன், இந்தப் பதிப்பு ஐபாட் 2 மற்றும் ஐபாட் மினி ஆகிய கருவிகளில் இயங்கும் என்றும் அப்பிளினால் அறிவுரை வழங்கப்பட்டது. ஜூலை 8, 2013 அன்று ஐஓஸ் 7 பீட்டா பதிப்பு மூன்று வெளியிடப்பட்டது.

செப்டம்பர் 10 இல் நடந்த புதிய ஐபோன் சீ, ஐபோன் 5எஸ் ஆகிய கருவிகளை அறிமுகப்படுத்த நிகழ்ந்த மாநாட்டில் அப்பிள், ஐஓஸ் 7 பொது மக்கள் பாவனைக்காக செப்டம்பர் 28ம் திகதி வழங்கப்படும் என அறிவித்தல் விடுத்தது.

ஐஓஸ் 7 பதிப்பின் மூலம் ஐபோன் 5எஸ் மற்றும் ஐபோன் 5சீ ஆகிய தொலைபேசிகளில் பாரம்பரியமாகப் பயன்படுத்தபட்டு வந்த நுழைவுக் கடவுச்சொல்லிற்குப் பதிலாக, கைரேகையைப் பயன்படுத்தி தொலைபேசியினுள் புகும் வசதியை அப்பிள் ஏற்படுத்திக் கொடுத்தது.

அக்டோபர் 28ம் திகதி ஐஓஸ் 7 பதிப்பின் புதிய ஒரு பதிப்பை அப்பிள் வழங்கியது. இந்த பதிப்பின் மூலம் சிலர் ஐஓஸ் 7 ஐப் பயன்படுத்தும் போது தமக்கு ஏற்பட்டதாக் குறிப்பிட்ட இயக்க நோயிற்கான (motion sickness)தீர்வு வழங்கப்பட்டு இருந்தது.

வடிவமைப்பு[தொகு]

ஐஓஎஸ் 7இன் பயனர் இடைமுகம் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியிருந்தது. இந்த மாற்றம் ஐஓஎஸ் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்து பார்க்கும் போது இடம்பெற்ற மிகப்பெரிய மாற்றமாக கணிக்கப்படுகின்றது.

ஐஓஎஸ் 7 இன் செயலிளிற்கான ஐகான்களை அப்பிளின் சந்தைப்படுத்தல் பிரிவு அமைத்ததுடன் அவற்றை அமைப்பதற்காக நிறத்தெரிவுகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை மூலம் ஐஓஎஸ் 6இன் ஐகான்களில் இருந்து இந்த இயங்கு தளத்திற்கான ஐகான்கள் பெருமளவில் மாறுபட்டிருந்தன.

தமிழாதரவு[தொகு]

ஐஓஎஸ்இல் ஏற்கனவே தமிழ் ஆதரவு இருப்பினும் இயங்குதளம் முழுவதும் பயன்படுத்தக் கூடிய விசைப்பலகை இருக்கவில்லை. இதனால் தமிழில் தட்டச்சிட செல்லினம் போன்ற மூன்றாம் நபர் செயலிகளை நாட வேண்டியிருந்தது. ஆயினும் ஐஓஎஸ் 7 பதிப்பின் பின்னர் உள்ளமைந்த தமிழ் விசைப்பலகை வழங்கப்படுகின்றது.[1]

வரவேற்பு[தொகு]

ஐஓஎஸ் 7 பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்றைப் பெற்றது. ஐஓஎஸ் 7 வெளியிட்டு முதல் நாளிலேயே சுமார் 35 வீதமான பயர்கள் தமது ஐஓஎஸ் பதிப்பைத் ஐஓஎஸ் 7க்குத் தரமுயர்த்திக் கொண்டனர். செப்டம்பர் 22, 2013 அன்று சுமார் 200 மில்லியன் கருவிகளில் ஐஒஎஸ் 7 இயங்கிக்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அப்பிள் இந்த நிகழ்வானது ஐஒஎஸ் வரலாற்றில் மிக வேகமாக இடம்பெற்ற இயங்குதள தரமுயர்த்தல் என்று அறிவித்தது. ஐஒஎஸ் 7 வெளியிடப்பட்ட சில தினங்களிலேயே முன் திரையில் காட்டப்படும் கடவுச் சொல் பொறிமுறையை உடைத்து உள்ளே செல்லும் செயற்பாடுகளை சில மென்பொருள் வல்லுனர்கள் அறிந்து கொண்டனர். ஆயினும் அந்த வழு பின்னர் வெளியிடப்பட்ட ஐஒஸ் பதிப்புகளில் சீர் திருத்தப்பட்டது.

ஐபோன் 4 போன்ற பழைய கருவிகளைப் பாவித்தோர் தமது கருவிகள் ஐஒஎஸ் 7 இல் மிக மெதுவாக இயங்குவதாகக் குறைபட்டுக் கொண்டனர். ஆயினும் இவற்றைச் சீர் செய்ய அப்பிளின் மன்றங்களில் தீர்வுகள் வைக்கப்பட்டன.

ஐஓஎஸ் 7 பெருமெடுப்பில் வெற்றி பெற்றாலும் பலர் ஐஓஎஸ் 7 வின்டோஸ் 8 மற்றும் அன்ரொயிட் நகர்பேசி இயங்குதளங்களில் இருந்து பல பயனர் இடைமுக வடிவமைப்புகளைப் பிரதிசெய்துள்ளதாகக் குற்றம் சாட்டினர்.

உசாத்துணை[தொகு]

  1. ஐஓஎஸ் 7இல் தமிழ் விசைப்பலகைஐஓஎஸ் இயங்குதளங்கள் ஏனைய மோதிரங்களை ஆளும் மாய மோதிரம்
ஐபோன் ஓஎஸ் 1 | ஐபோன் ஓஎஸ் 2 |ஐபோன் ஓஎஸ் 3 | ஐஓஎஸ் 4 | ஐஓஎஸ் 5 |ஐஓஎஸ் 6 |ஐஓஎஸ் 7
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஐஓஎஸ்_7&oldid=1734330" இருந்து மீள்விக்கப்பட்டது