ஏ. ஆர். இரகுமான் அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

ஏ. ஆர். இரகுமான் அறக்கட்டளை (AR Rahman Foundation) என்பது வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) சட்டம், 2010-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஓர் இலாப நோக்கற்ற அமைப்பாகும். 2009ஆம் ஆண்டு இந்திய இசைக்கலைஞர் ஏ. ஆர். இரகுமானால் பேரிடர் நிவாரணத்திற்காக நிதி திரட்டவும், இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கவும் தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் இயக்குநர் கதீஜா இரகுமான் ஆவார்.

நோக்கம்[தொகு]

இந்த அறக்கட்டளையின் நோக்கமாகக் கல்வி, வாழ்க்கைத் திறன் மேம்பாடு, தொழில்முனைவு போன்றவற்றில் வாய்ப்பு ஏற்படுத்தித் தருதல், மருத்துவம், கல்வி, திருமணம், விவசாயம், தகுதியுடையோர் மற்றும் பின்தங்கியவர்களுக்கான தொழில்முனைவோருக்கு நிதியுதவியுடன் ஆதரவு தருதல், இசையின் மூலம் வாழ்க்கைத் திறன்களை வழங்கவும் மற்றும் அதிகாரம் அளிக்கவும், தலைமைத்துவத்தை மேம்படுத்துதல், திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி, ஆவணங்கள் மற்றும் கலைத் திட்டங்களைக் காப்பகப்படுத்துதல் ஆகும்.

திட்டங்கள்[தொகு]

  • சன்சைன் இசைக்குழு
  • கருணாமிர்தசாகரம்
  • மனிதாபிமான அடிப்படையில் உதவி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Indian non-profit